[ad_1]

Madurai: மதுரை மாவட்டம் ஒத்தக்கடை பேருந்து நிறுத்தம் அருகே, தனியாருக்குச் சொந்தமான பழைய திரையரங்கம்  ஒன்று இருந்துவருகிறது. அப்பகுதியில் விவசாயம் செய்துவரும் மக்களுக்கும் சில்வர் பட்டரைத் தொழிலார்கள் உள்ளிட்ட பிற தொழிலாளர்களுக்கும் பொழுது போக்கு இடமாக விளங்கியது இந்தத் திரையரங்கம். ஆனால், சில ஆண்டுகளாக செயல்படாமல் இருந்துவந்தது. அதனால், மேலூர் அருகேயுள்ள தனியார் டயர் தொழிற்சாலை நிறுவனத்தினர் அதை குடோனாகப் பயன்படுத்திவந்தனர். இதில் டயர் உற்பத்திக்குத் தேவையான வேதியியல் மூலப்பொருள்கள் பாதுகாக்கப்பட்டு வந்தது.
 




இந்நிலையில், இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தால், தீ மளமளவெனப் பரவியது. தகவலறிந்த தல்லாகுளம் தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து, சுமார் 5 மணி நேர போராட்டத்துக்குப் பிறகு தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். இந்தத் தீ விபத்தால், சுமார் 1 கோடியே 50 லட்சம் மதிப்பிலான மூலப்பொருள்கள் தீயில் கருகியதாகக் கூறப்படுகிறது. மேலும்,  குடியிருப்புகள் அதிகம் உள்ள ஒத்தக்கடை பகுதியில் இந்த சம்பவம் நடைபெற்றதால், கரும்புகை பரவி மக்கள் இன்னலுக்கு ஆளாகினர் .



இந்தத் தீ விபத்தால், மதுரை வரும் வாகனங்கள் அனைத்தும் பாண்டிகோயில் ரிங்ரோடு வழியாக திருப்பிவிடப்பட்டன . மேலும், இந்தத் தீ விபத்துகுறித்து காவல்துறை விசாரணை நடத்திவருகிறது .