[ad_1]





மும்பை பங்குச்சந்தை வர்த்தகத்தில் ஈடுபட,19 நிறுவனங்களுக்கு பங்குச்சந்தைக் கட்டுப்பாட்டு அமைப்பான 'செபி' தடை விதித்துள்ளது.





நாடு முழுவதும் ஷெல் நிறுவனங்களுக்கு எதிரான நடவடிக்கைகள் தீவிரம் அடைந்துள்ளன. செயல்படாமல் இருக்கும் ஷெல் நிறுவனங்களைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது.  சமீபத்தில், 2,17,239 நிறுவனங்கள் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டன.  இந்நிறுவனங்கள், நீண்ட காலமாக செயல்பாட்டில் இல்லாமலும், வருமான வரிக்கணக்கு தாக்கல் செய்யாததாலும் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இந்நிலையில், மும்பை பங்குச்சந்தையில் பங்கு வர்த்தகம் செய்ய, தொழில்நுட்பத்துறையைச் சேர்ந்த 19 நிறுவனங்களுக்கு செபி தடை விதித்துள்ளது. அவற்றின் விவரம்:



ஐ.ஓ.எல் நெட்காம், ஸ்கின்டில்லா சாஃப்ட்வேர் டெக்னாலஜி, டெலிடேட்டா இன்ஃபர்மேட்டிக்ஸ், ஆதம் கம்சாப், ஏ.எம்.ஐ கம்ப்யூட்டர்ஸ், சி.எஸ்.ஜே டெக்னாலஜீஸ், செக்யூல்சாஃப்ட் இந்தியா, சாஃப்ட்ராக் டெக்னாலஜி, யுனிபோர்ட் கம்ப்யூட்டர்ஸ், காவேரி சாஃப்ட்வேர் என்ஜினீயரிங், கம்பூடைன் வின்போஸ், கம்பூடெக் இன்டர்நேஷனல் (சி.டி.ஐ.), தனுஸ் டெக்னாலஜீஸ், டி.எஸ்.க்யூ. சாஃப்ட்வேர், யூரோப்பியன் சாஃப்ட்வேர் அலையன்செஸ் லிமிடெட், இன்ஃபர்மேஷன் இந்தியா டெக்னாலஜீஸ், நெக்ஸஸ் சாஃப்ட்வேர், ஸ்கைலிட் டெலிகம்யூனிகேஷன். சந்தை விதிமுறைகளை மீறியதற்காக செபி இந்நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுத்துள்ளது. 
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்







!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');

fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");