[ad_1]







Courtesy : ANI


நிலமோசடி வழக்கில் சிக்கிய கேரளாவின் போக்குவரத்துத் துறை அமைச்சர் தாமஸ் சாண்டி தனது பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். கேரளாவில் 18 மாதங்களில், ராஜினாமா செய்யும் மூன்றாவது அமைச்சர் இவர்.

நிலமோசடி

தாமஸ் சாண்டிக்குச் சொந்தமான ரிசார்ட், நிலமோசடியில் ஈடுபட்டதாக ஆழப்புழா மாவட்ட ஆட்சியர், கேரள உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்திருந்தார். இந்த அறிக்கையை ஏற்கக் கூடாது என்று தாமஸ் சாண்டி தாக்கல் செய்த மனுவையும் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. இந்நிலையில்தான், தாமஸ் சாண்டி ராஜினாமா செய்ய வேண்டும் என்று கேரள மாநில எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. இதையடுத்து, கடந்த 15-ம் தேதி தனது பதவியை ராஜினாமா செய்வதாக முதல்வர் பினராய் விஜயனிடம் கடிதம் கொடுத்தார். அவர் அந்தக் கடிதத்தை ஆளுநருக்கு அனுப்பிவைத்தார்.
ஆழப்புழா மாவட்டத்தில் குட்டநாடு தொகுதியில் இருந்து கேரள சட்டசபைக்கு மூன்றாவது முறையாக தாமஸ் சாண்டி தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். குவைத்தில் பெரும் தொழிலதிபராகவும் இவர் இருக்கிறார்.



 

யார் இந்த தாமஸ்?

காங்கிரஸ் மூத்த தலைவர் கே.கருணாகரன் கடந்த 2005-ம் ஆண்டு தொடங்கிய ஜனநாயக இந்திய காங்கிரஸ் கட்சியில் தாமஸ் சாண்டி இருந்தார். 2006-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் ஜனநாயக இந்திரா காங்கிரஸ் கட்சி, காங்கிரஸ் தலைமையிலான யு.டி.எஃப் கூட்டணியுடன் கூட்டணி வைத்திருந்தது. பின்னர் ஜனநாயக இந்திரா காங்கிரஸ் கட்சி, தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து விட்டது. இப்போது தாமஸ் சாண்டி தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏ-வாக இருக்கிறார்.
இதற்கு முன்பு பினராய் விஜயன் அமைச்சரவையில், தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஏ.கே. சுசீந்திரன் அமைச்சராக இருந்தார். ஆனால், அவர்மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்ததை அடுத்து அவரும் பதவியை ராஜினாமா செய்தார். அப்போது அந்த காலியிடத்தில் தாமஸ் அமைச்சராக பதவி ஏற்றார். பினராயி விஜயன் அமைச்சரவையில் தொழில் துறை அமைச்சராக இருந்த இ.பி. ஜெயராஜன் கடந்த ஆண்டு ராஜினாமா செய்தார். அவருக்குப் பின்னர் சுசீந்திரன் கடந்த மார்ச் மாதம் ராஜினாமா செய்தார். இப்போது மூன்றாவதாக தாமஸ் ராஜினாமா செய்திருக்கிறார்.
தாமஸ் கடந்த ஏப்ரல் ஒன்றாம் தேதி போக்குவரத்துத் துறை அமைச்சராகப் பதவி ஏற்றார். கல்வித் துறையில் ஆர்வமிக்கவர். குவைத்தில் உள்ள இந்தியன் சென்ட்ரல் ஸ்கூல், இந்தியன் பப்ளிக் ஸ்கூல், த யுனெடெட் இந்தியன் ஸ்கூல் ஆகியவற்றின் தலைவராக இருக்கிறார். தவிர சவூதி அரேபியாவின் ரியாத்தில் இருக்கும் இன்டர்நேஷனல் இந்தியன் ஸ்கூலின் தலைவராகவும் இருக்கிறார். இவர் சென்னையில் ஒரு கல்லூரியில் டெலிகம்யூனிகேஷன் இன்ஜினீயரிங்கில் டிப்ளமோ படித்துள்ளார்.
தொழிலதிபர் ஆகும் முன்பு, கேரள மாணவர் யூனியன் என்ற மாணவர் சங்கத்தில் தீவிரமாக ஈடுபட்டார். குட்டநாடு கேரள மாணவர் யூனியனின் தலைவராகவும் பதவி வகித்திருக்கிறார். ஆழப்புழா பகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவராகவும் இருந்திருக்கிறார்.

இது கேரளா அரசியல்


கேரள மாநிலத்தில், அமைச்சர்கள், அரசியல்வாதிகள், பிரபலங்கள் மீது குற்றச்சாட்டுகள் இருந்தாலும் கூட எந்தவித தலையீடும் இல்லாமல் போலீஸார் விசாரணை மேற்கொள்கின்றனர். இதன் விளைவாகவே அமைச்சர்கள் அடுத்தடுத்து பதவி இழக்கின்றனர். கேரள மாநிலத்தை ஒட்டி இருக்கும் நமது தமிழகத்தில், பதவியில் இருக்கும் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் பொதுப்பணித்துறையில் தார் ஊழல் குற்றசாட்டு எழுந்தது. சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மீது,வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக தேர்தல் ஆணையம் குற்றம்சாட்டி உள்ளது. முதல்வர் எடப்பாடி உள்ளிட்ட அமைச்சர்கள் மீதும் தேர்தல் ஆணையம் புகார் கூறி இருக்கிறது. எனவே, இவர்கள் ராஜினாமா செய்ய வேண்டும் என்று தமிழகத்தில் எதிர்க்கட்சிகள் குரல் கொடுத்து ஓய்ந்துவிட்டன. ஆனால், எந்த குற்றசாட்டுகள் முன் வைத்தாலும், அசைந்து கொடுக்காமல் இருக்கின்றனர் தமிழக அமைச்சர்கள்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்



!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');

fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");