[ad_1]
பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பின், பழைய ரூபாய் நோட்டுகளை மாற்ற உதவிய அரசு அதிகாரிகள் 180 பேரைக் கைதுசெய்திருப்பதாக சி.பி.ஐ தெரிவித்துள்ளது.
பண மதிப்பிழப்பு நடவடிக்கை அறிவிக்கப்பட்டு இன்றுடன் ஓராண்டு நிறைவடைகிறது. இந்த தினத்தை கறுப்பு தினமாக அனுசரித்து, எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்திவருகின்றன. கறுப்புப் பண ஒழிப்பு தினம் என்று பா.ஜ.க சொல்லிவருகிறது. பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பின், பழைய ரூபாய் நோட்டுகளை சட்டவிரோதமாக மாற்றும் சம்பவங்கள் நடைபெற்றன. வங்கி மற்றும் அரசு அதிகாரிகள் உதவியோடு இந்தச் சம்பவங்கள் நடைபெற்றன. பழைய ரூபாய் நோட்டுகளை மாற்ற உதவியவர்கள், மாற்ற முயன்றவர்கள் என 307 பேரை சி.பி.ஐ கைதுசெய்துள்ளது. அவர்களில் 180 பேர் அரசு ஊழியர்கள், அதிகாரிகள் ஆவார்கள். இது சம்பந்தமாக, சி.பி.ஐ 77 வழக்குகளைப் பதிவுசெய்துள்ளது.
பணமதிப்பிழப்பு - பழைய ரூபாய் நோட்டுகளை மாற்ற உதவிய அரசு அதிகாரிகள் 180 பேர் கைது!
TAGS :
COMMENTS