[ad_1]





ராமநாதபுரத்தில் நடக்க உள்ள எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில், ரூ.165 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர்  பழனிசாமி வழங்க இருப்பதாக அமைச்சர் மணிகண்டன் தெரிவித்தார்.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா, ராமநாதபுரத்தில் நடக்க உள்ளது. நவம்பர் 25-ம் தேதி நடக்க உள்ள இந்த விழாவைப் பிரமாண்டமாக நடத்துவதற்காக, அமைச்சர் மணிகண்டன் தலைமையில் அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. மாவட்ட ஆட்சியர் நடராஜன் முன்னிலை வகித்தார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர்  ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்க உள்ள இந்த விழாவில், எந்தெந்த அதிகாரிகள் என்னென்ன பணிகளை மேற்கொள்வது, மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்றத் தொகுதிகளுக்குத் தேவையான திட்டங்கள் என்னென்ன என்று  தேர்வுசெய்வது, அவற்றை முதல்வர் மூலம் விழா மேடையில் அறிவிக்கும் வகையில் கண்டறிவது போன்றவை குறித்து ஆய்வுசெய்யப்பட்டது.



 


இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மணிகண்டன், `ராமநாதபுரத்தில் இம்மாதம் நடக்க உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா பிரமாண்டமாக நடக்க உள்ளது. அன்றைய தினம், முதல்வர் அவர்கள் ஒட்டு மொத்தமாக ரூ.165 கோடியே 14 லட்சத்து 57 ஆயிரத்து 545 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார். இவை தவிர, கீழக்கரை  வட்ட அலுவலகம் உள்ளிட்ட பணிகளுக்கான அடிக்கல் நாட்ட உள்ளார். மேலும், மாவட்டத்திற்குத் தேவையான திட்டங்கள் பற்றியும் அறிவிக்க உள்ளார். இந்த விழாவை சிறப்பாக நடத்துவது குறித்து அதிகாரிகளுக்கு உரிய ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. மேலும், தமிழக தகவல்  தொழில்நுட்பவியல் துறையின் சார்பில் தமிழ் இணையக் கழகம் மூலமாக உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் பங்கேற்கும் வகையில், டாக்டர் எம்.ஜி.ஆர் புகழை மேம்படுத்தும் வகையில் கட்டுரைப் போட்டி நடத்தப்படுகிறது.  அதில் வெற்றிபெறும் முதல் மூன்று வெற்றியாளர்களுக்கு முதல்வரின் கரங்களால் பரிசு வழங்கபட உள்ளது'' என்றார். இந்த ஆய்வுக் கூட்டத்தில், பரமக்குடி சார் ஆட்சியர் விஷ்ணு சந்திரன், வருவாய் அலுவலர்  முத்துமாரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்