[ad_1]
அமெரிக்காவின் 16 வது அதிபராக 1860-ம் ஆண்டு நவம்பர் 6-ம் தேதி ஆபிரஹாம் லிங்கன் பொறுப்பேற்றார்.
அமெரிக்காவின் கெண்டகியில் 1809-ம் ஆண்டு பிறந்த ஆபிரஹாம் லிங்கன், மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் வளர்ந்தவர். தந்தை ஒரு செருப்பு தைக்கும் தொழிலாளி. வறுமையில் வாடியதால், புத்தகங்களை இரவல் வாங்கித்தான் படித்தார் லிங்கன். அவர் தந்தையிடமிருந்து நேர்மையைக் கற்றிருந்த அவர், தான் படித்த வக்கீல் படிப்பை லாபம் சம்பாதிக்கும் கருவியாக ஒருபோதும் பயன்படுத்த மாட்டேன் என்று உறுதியோடு இருந்தார்.
அவரது பதினைந்து வயதில் நியூ ஆர்லியன்ஸ் நகரில் வசித்தபோது அடிமைகள் என்ற பெயரில் அமெரிக்க வாழ் ஆப்பிரிக்கர்கள் விலைக்கு விற்கப்படுவதையும் கொத்தடிமைகளாக நடத்தப்படுவதையும் கண்டிருந்தார். பிற்பாடு, அவர்களுக்கு உதவ நினைத்து லிங்கனே அரசியலில் இறங்கினார். அமெரிக்க அதிபர் தேர்தலில் நின்றபோது, அடிமையில்லா அமெரிக்காவை உருவாக்குவேன் என்று கூறினார். அதன் பின்னர் கறுப்பின மக்களின் அடிமைத்தனத்தைப் போக்க அவர் சந்தித்த போராட்டங்களும் சவால்களும் எதிர்கொண்ட ஏளனங்களும் ஒன்றிரண்டல்ல.
”மக்களால் மக்களுக்காக மக்களே செய்யும் ஆட்சி” என கெட்டிஸ்பர்க் கூட்டத்தில் லிங்கன் பேசியதுதான் இன்றுவரை ஜனநாயகத்தின் விளக்கமாக உள்ளது. வறுமையில் இருந்தாலும் நேர்மைதான் முக்கியம்; போராட்டத்தில் வெற்றிகளைவிட நியாயத்தின் பக்கம் நிற்பதுதான் அவசியம் என்று உணர்த்தியவர் லிங்கன்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
அமெரிக்காவின் 16 வது அதிபராக லிங்கன் பொறுப்பேற்ற நாள் இன்று!
TAGS :
COMMENTS