[ad_1]
"கரூர் மாவட்டத்தில் உள்ள நீர்த்தேக்கத் தொட்டிகளை 15 தினங்களுக்கு ஒருமுறை கழுவி சுத்தம் செய்யாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்று கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் கோவிந்தராஜ் எச்சரிக்கைசெய்துள்ளார்.கரூர் நகரப் பகுதிகளான அண்ணாநகர் மற்றும் புலியூர் பேரூராட்சி ஆகிய பகுதிகளில், தரைதளத் தொட்டிகள், சின்டெக்ஸ் தொட்டிகள் மற்றும் குடியிருப்புகளில் உள்ள தண்ணீர்த் தொட்டிகளைக் கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் கோவிந்தராஜ் பார்வையிட்டு ஆய்வுசெய்தார். அப்போது, கரூர் நகராட்சி ஆணையர் அசோக்குமார், மாவட்ட மக்கள் செய்தித்தொடர்பு அலுவலர் செந்தில், வட்டாட்சியர் அருள், பேரூராட்சி செயலர் சுப்ரமணியன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.இந்த ஆய்வின்போது பேசிய மாவட்ட ஆட்சித்தலைவர் கோவிந்தராஜ், "டெங்கு தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, நீர்த்தேக்கத் தொட்டிகளை 15 நாள்களுக்கு ஒருமுறை சுத்தம்செய்து குடிநீர் விநியோகிக்க வேண்டும். இதை ஒவ்வொரு பொறுப்பு அலுவலரும் கண்காணித்திட உத்தரவிடப்பட்டுள்ளது. அப்படிச் செய்யாதவர்கள்மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் சரிசெய்யப்பட்டு, தண்ணீர் குளோரினேட் செய்யப்பட்டும், சுற்றுப்புறங்கள் தூய்மைசெய்யப்பட்டு வருகிறது. மேலும், படிப்படியாகப் பணிகளில் நல்ல முன்னேற்றம் காணப்பட்டுவருகிறது. கிராம மக்கள் விழிப்பு உணர்வுப் பெற ஏதுவாக, துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டும், செய்தி மக்கள் தொடர்புத்துறை வீடியோ வாகனம்மூலம் டெங்கு குறித்த விழிப்பு உணர்வு படக்காட்சிகளும் கிராமம் தோறும் நடத்தப்பட்டுவருகிறது. பொதுமக்களும் தங்கள் இருப்பிடம் மற்றும் சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும்" என்று கேட்டுக்கொண்டார்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');
fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");
15 நாள்களுக்கு ஒருமுறை நீர்த்தேக்கத் தொட்டிகளைச் சுத்தம் செய்யாவிட்டால் நடவடிக்கை - கலெக்டர் எச்சரிக்கை
TAGS :
COMMENTS