[ad_1]
வீடியோவை காண க்ளிக் செய்க...
நியூசிலாந்துக்கு எதிரான நேற்றைய போட்டிதான் ஆஷிஷ் நெஹ்ராவின் கடைசி சர்வதேச கிரிக்கெட் போட்டி. இந்தப் போட்டி அவரது சொந்த ஊரான டெல்லியில் நடைபெற்றது. அதில் இந்திய அணியின் 203 எனும் இமாலய இலக்கை நோக்கி ஆடி வந்த நியூசிலாந்து முக்கிய விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வந்தது.
போட்டியின் 16 வது ஓவரை சாஹல் வீசினார். அதன் 4 வது பந்தில் கீப்பரைக் கடந்து பந்து செல்ல அதைத் தடுக்க ஓடி வந்த நெஹ்ரா அசால்ட்டாகக் கால்பந்து வீரர்களைப்போல காலால் பந்தைத் தட்டிவிட்டு கையில் கேட்ச் செய்து தோனியிடம் வீசினார். இதைக் கேப்டன் கோலி மைதானத்திலேயே வாவ்! என ஆச்சர்யப்பட்டு மகிழ்ச்சியில் திளைத்தார். இந்த பீல்டிங் செய்த அடித்த நொடி மைதானமே அதிர்ந்தது. நெஹ்ராவால் அந்த ஓவரில் 4 வது பந்து அல்டிமேட் ஸ்பெஷலானது. நேற்றைய போட்டியின் பெஸ்ட் மொமண்டிலும் இடம் பிடித்தது.
வீடியோவை காண க்ளிக் செய்க...
போட்டி முடிந்த பிறது, நெஹ்ராவை கோலியும் தவானும் தோளில் சுமந்து வலம் வந்தது. அவர் மகன் அருஷ் அவரைப்போலவே பந்து வீசி இமிடேட் செய்தது என சுவாரஸ்யங்கள் நிறைந்த ஃபேர்வெலாக இந்தப் போட்டி அமைந்தது.
ஃபேர்வெல் போட்டியில் 15.4 வது பந்தை ஸ்பெஷலாக்கிய ஆஷிஷ் நெஹ்ரா
TAGS :
COMMENTS