[ad_1]
சென்னை, ராஜாஜி சாலையிலுள்ள 150 ஆண்டுகள் பழமையான கட்டிடம் இடிந்துவிழுந்தது.
சென்னை, ராஜாஜி சாலையில் சுங்கத்துறை அலுவலகத்துக்கு அருகிலுள்ளது கக்கன் கட்டிடம். இந்தக் கட்டிடம் 150 ஆண்டுகள் பழமையானது. இந்தக் கட்டிடம் திடீரென்று இன்று 10 மணி அளவில் இடிந்துவிழுந்தது. அதில், உயிர்ச் சேதம் ஏதும் ஏற்படவில்லை. கட்டிட விபத்தையடுத்து அருகில் வசிக்கும் மக்கள் வேறு இடத்துக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். ராஜாஜி, ஒரு வழிப் பாதையாக மாற்றப்பட்டுள்ளது. அதனால், கடற்கரையில் சாலையிலும் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தீயணைப்புத் துறையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டுவருகின்றனர். காவல்துறையினர், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், கட்டிட இடிபாடுகளை நேரில் சென்று பார்வையிட்டார்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
150 ஆண்டுகள் பழமையான கக்கன் கட்டிடம் திடீரென இடிந்தது..!
TAGS :
COMMENTS