[ad_1]

நீட் தேர்வு உட்பட போட்டித் தேர்வுகளுக்கான அரசு பயிற்சி வகுப்பு வரும் 13-ம் தேதி துவங்குகிறது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பயிற்சி மையத்தைத் துவக்கி வைக்கிறார். தமிழகம் முழுவதும் 412 இடங்களில் பயிற்சி மையங்கள் செயல்பட இருக்கிறது. பாடத்திட்டம், உரிய பயிற்சியின்மை போன்ற காரணங்களால் நீட் உட்பட பல்வேறு போட்டித் தேர்வுகளில் தமிழக மாணவர்கள் பின்தங்கி வருகின்றனர். போட்டித் தேர்வுகளை எதிர்கொள்வதில் நகரப்புற மாணவர்களைவிட, கிராமப்புற அரசு பள்ளி மாணவர்கள் பெரும் சிரமத்தை எதிர்கொள்கின்றனர்.

‘அரசுப் பள்ளி மாணவர்களுக்கு போட்டித் தேர்வுகள் குறித்த உரிய விளக்கமும், அதற்கான பயிற்சிகளும் அரசு வழங்க வேண்டும்’, என்கிற கோரிக்கை நீண்ட நாள்களாக முன்வைக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் தமிழக மாணவர்களுக்கு இலவச பயிற்சி வகுப்புகளை வரும் 13-ம் தேதி முதல் அரசு துவக்குகிறது. இதற்கான தொடக்க நிகழ்ச்சி சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறுகிறது. பயிற்சி வகுப்புகளை துவக்கி வைக்கும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, மாணவர்களுக்கு வழங்கப்படும் பயிற்சி கையேட்டை வெளியிடுகிறார். விழாவில் துணை முதல்வர் ஓ.பி.எஸ், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.