[ad_1]
இடைத்தேர்தல் பார்முலா என்றாலே தமிழகத்தில் நடக்கும் இடைத்தேர்தல்கள்தான் முன்னுதாரணமாகக் காட்டப்படுகின்றன. வாக்குகளை விலைக்கு வாங்கும் இந்த உத்தியை தேர்தல் ஆணையம் எவ்வளவு முயன்றாலும் தடுக்க முடியவில்லை.
இது ஒரு புறம் இருக்க, இப்போது குஜராத் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் இதே போன்ற பாணியை பி.ஜே.பி பின்பற்றுகிறது. குஜராத் மாநிலத்தில் எப்பாடுபட்டாவது வெற்றி பெற்றே தீர வேண்டும் என்பது பி.ஜே.பி-யின்முதன்மையான கவுரவப் பிரச்னையாக இருக்கிறது. பிரதமர் மோடியின் சொந்தமண் என்பதுதான் அதற்கு முக்கிய காரணம்.
150 தொகுதிகள் இலக்கு
அதே நேரத்தில், மோடியை அவரது சொந்தமண்ணில்தான் வீழ்த்த வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியும் தீவிர அக்கறை காட்டுகிறது. லோக்கல் ஜாதித் தலைவர்களுடன் கைகோத்து காங்கிரஸ் களம் இறங்குகிறது. ராகுல் காந்தி கோவில், கோவிலாகச் சென்று வழிபடுகிறார். மோடி முதல்வராக இருந்த போது 2012-ம் ஆண்டு நடந்த குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தம் உள்ள 182தொகுதிகளில் 116 தொகுதிகளில் பி.ஜே.பி வெற்றி பெற்றது. இந்த முறை 150 தொகுதிகளில் பி.ஜே.பி வெற்றி பெற வேண்டும் என்று அமித் ஷா, கட்சியினருக்கு உத்தரவிட்டிருக்கிறார்.
இதையடுத்து அதற்கான வியூகங்களை பி.ஜே.பி-யினர் வகுத்து வருகின்றனர். தமிழகத்தில் இடைத்தேர்தல் நடக்கும் தொகுதிகளுக்குச் சென்றால், கரைவேட்டி கட்டியவர்கள், கையில் வாக்காளர் பட்டியலை வைத்துக் கொண்டு வீடு, வீடாகச் சென்று ஓட்டுக் கேட்பார்கள். இப்போது குஜராத்தில் பி.ஜே.பி-யும் அதே போன்ற ஒரு பாணியை கடைபிடிக்கிறது.
அமித்ஷா பயிற்சி
உ.பி சட்டப்பேரவைத் தேர்தலில் இதே முறையைக் கையாண்டுதான், பி.ஜே.பி வெற்றி பெற்றிருக்கிறது. உ.பி-யில் ஒவ்வொரு பூத்துக்கும் 10 கட்சிக்காரர்களை நியமித்தனர். பத்துபேரும் 1000 வாக்காளர்களை ஓட்டுப்போடுவதற்கு பூத்துக்கு அழைத்து வர வேண்டும் என்று சொல்லப்பட்டிருந்தது. இந்த பாணியை கடைபிடித்ததால்தான் உ.பி-யில் பி.ஜே.பி வெற்றி பெற்றது என்கிறார்கள். எனவே, இதை குஜராத்திலும் இதே முறையைக் கடைபிடிக்க முடிவு செய்துள்ளனர்.
குஜராத்தில் மட்டும் ஒரு சிறு மாற்றம் செய்துள்ளனர். உ.பி-யைப் போல அல்லாமல் குஜராத்தில் பி.ஜே.பி-க்கு அதிருப்தி அலை அதிக அளவு இருக்கிறது. எனவே, ஒரு கட்சிக்காரருக்கு 30 வாக்காளர்கள் என்று பிரித்து கொடுத்திருக்கிறார்கள். ஒருவர் 30 பேரை, தாமரைக்கு வாக்களிக்கும்படி செய்யவேண்டும்.
எவ்வாறு வாக்காளர்களைக் கவர வேண்டும். எப்படி அவர்களிடம் பேச வேண்டும் என்று கட்சிக்கார ர்களுக்கு அமித்ஷாவே பயிற்சி கொடுத்திருப்பதாகச் சொல்கிறார்கள். குஜராத்தின் ஒவ்வொரு தெருவும் பி.ஜே.பி-க்கு ஆதரவாக இருக்கும் வகையிலான உத்திகளை செயல்படுத்த அமித்ஷா உத்தரவிட்டிருக்கிறார்.
அமித்ஷா, கட்சிக்காரர்களை ஒருங்கிணைப்பதில் தனித்திறன் வாய்ந்தவர் என்று சொல்கிறார்கள். ஆனால், இந்த முறை காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி கூடுதல் அக்கறையுடன் குஜராத்தில் களம் இறங்கி இருக்கிறார். எனவே,தான் அமித்ஷாவும் கூடுதலாக மெனக்கெடுகிறார்.
தேர்தல் காமெடிகள்
பி.ஜே.பி தரப்பில் குஜராத்தில் போட்டியிடும் மூன்றாவது கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. காங்கிரஸ் தரப்பிலும் 19-ம் தேதி இரவு முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளனர். பி.ஜே.பி-யில் சீட்கிடைக்காதவர்கள் அதிருப்தியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதே போல காங்கிரஸ் கூட்டணியில் போட்டியிடும் ஹர்திக் படேல் கூடுதல் தொகுதிகள் கிடைக்கவில்லை என்று அதிருப்தியில் இருக்கிறார். காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு தெரிவித்து பேச இருந்த பொதுக்கூட்டத்தையும் அவர் ரத்து செய்திருக்கிறார். இரண்டு கட்சியிலும் அதிருப்தியாளர்கள் போர்கொடி தூக்குகின்றனர். இந்த தேர்தல் நேர காமெடிகளை எல்லாம் வாக்காளர்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');
fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");
1:30.... தமிழக இடைத்தேர்தல் ஃபார்முலாவை கையிலெடுக்கும் குஜராத் பி.ஜே.பி!
TAGS :
COMMENTS