[ad_1]





Chennai: தமிழகத்தில் அடுத்த கல்வியாண்டு முதல் ஒன்றாம் வகுப்பில் இருந்து 12-ம் வகுப்பு வரை பாடத்திட்டம் மாற்றப்படுகிறது. இதற்கான வரைவு தொகுப்பு நூல்களை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்டார்.






இதுதொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில்,  “தமிழ்நாடு பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தை மாற்றியமைக்க கடந்த மே 22-ம் தேதி அரசாணை வெளியிடப்பட்டது. இதைத் தொடர்ந்து தற்போதுள்ள கல்வி முறையை மேம்படுத்த முனைவர் எம்.ஆனந்தகிருஷ்ணன்  தலைமையில் 'கலைத்திட்ட வடிவமைப்புக் குழு' உருவாக்கப்பட்டது. 'தமிழ்நாடு புதிய கலைத்திட்ட வடிவமைப்பு 2017' உருவாக்கம் தொடர்பாக கடந்த ஜூலை 20 முதல் 22-ம் தேதி வரை 3 நாள்கள் பல்வேறு துறைசார் வல்லுநர்கள், கல்வியாளர்கள், எழுத்தாளர்கள், பேராசிரியர்கள், ஆசிரியர்கள்  உள்ளிட்ட சுமார் 2,000 நபர்கள் பங்குபெற்ற கருத்தரங்கம் நடைபெற்றது. கருத்தரங்கில் விவாதிக்கப்பட்ட கருத்துகள் தொகுக்கப்பட்டு ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், கணிதம் மற்றும் அறிவியல், மொழி மற்றும் கலைப்பிரிவு பாடங்கள், மதிப்பீட்டு முறை வடிவமைப்பு, தகவல் தொடர்பு தொழில்நுட்பம் ஆகிய புலங்கள் சார்ந்து கலைத்திட்ட வடிவமைப்பு துணைக்குழுக்கள் உருவாக்கப்பட்டன.  பல்வேறு தரப்பில் இருந்து பெறப்பட்ட கருத்துகள் அடிப்படையில் வரைவு பாடத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.தற்போது வெளியிடப்படும் பாடத்திட்டத்தை உலகெங்கிலும் உள்ள கல்வியாளர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பொதுமக்கள் படித்துப்பார்த்து, தாங்கள் தெரிவிக்க வேண்டிய கருத்துகள் ஏதேனும் இருப்பின் அதனை www.tnscert.org  என்ற இணையதளம் வழி பதிவேற்றம் செய்யலாம்.  மேலும், கடிதம் வாயிலாகவும் தெரிவிக்கலாம். இவ்வாறு பெறப்படும் கருத்துகள் அனைத்தும் பரிசீலிக்கப்பட்டு வரைவு பாடத்திட்டம் இறுதி செய்யப்படும். இதர மொழிப்பாடங்களுக்கான வரைவு பாடத்திட்டம் துறை சார்ந்த வல்லுநர்களின் கருத்துகள் பெறப்பட்டு இன்னும் ஒரு வார காலத்துக்குள் வெளியிடப்படும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. வரைவு பாடநூல்கள் வெளியிடும் நிகழ்வில் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலாளர்  பிரதீப் யாதவ், பள்ளிக்கல்வித் துறைச் செயலாளர் த. உதயச்சந்திரன் உள்பட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்







!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');

fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");