[ad_1]
கடந்த இரண்டு மாதத்தில் 12 திருட்டு சம்பவம் நடந்திருப்பதால் அரியலூர் மக்கள் அதிர்ச்சியில் உறைந்திருந்திருக்கிறார்கள்.
அரியலூர் மாவட்டம் மேலனிக்குழி கிராமத்தைச் சேர்ந்தவர் தனலெட்சுமி. இவர் தலைமையாசிரியராக இருந்து ஓய்வு பெற்றவர். இவர் மட்டும் வீட்டில் தனியாக இருந்து வந்துள்ளார். இவர் தீபாவளி பண்டிகைக்காக மயிலாடுதுறையில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்றுவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டுள்ளதை கண்டு அதிர்ச்சியடைந்த தனலெட்சுமி வீட்டிற்குள்ளே சென்று பார்த்தபோது பீரோவும் உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த இரண்டு லட்சம் ரூபாய் பணம் மற்றும் 25 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது தெரியவந்தது.
இது குறித்து தனலெட்சுமி மீன்சுருட்டி காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். மேலும் கொள்ளையர்களை அடையாளம் காணும் வகையில் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கைரேகை பதிவுகள் எடுக்கப்பட்டது. மேலும் கொள்ளையர்கள் குறித்து போலிஸார் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.
அதேபோல் கடந்த வாரத்தில் டி பழூர் பகுதியில் படுத்து தூங்கிகொண்டிருந்த பெண்ணிடம் 6 பவுன் நகையை பறித்து சென்றார்கள் திருடர்கள். அன்று மட்டும் அதே தெருவில் இரண்டும் இடங்களில் கொள்ளை சம்பவம் அரங்கேறியது. இன்று வரையிலும் அந்த கொள்ளை சம்பவம் பற்றி எந்த தகவலும் கிடைக்காமல் போலிஸ் அல்லாடுகிறது. அதற்குள் இன்னொரு திருட்டு சம்பவம் நடந்திருப்பதால் அரியலூர் மக்கள் அச்சத்தில் உறைந்திருக்கிறார்கள்.
இரண்டு மாதத்தில் 12 திருட்டு... அரியலூரை அதிரவைக்கும் கொள்ளைக்கும்பல்!
TAGS :
COMMENTS