[ad_1]
'ரூபாய் நோட்டில் காந்தியின் படத்தை அச்சிடக் கூடாது' என்று வழக்கு தொடர்ந்தவருக்கு, உயர் நீதிமன்றம் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது.
'இந்திய அரசின் ரூபாய் நோட்டுகளில் காந்தியின் படத்தை அச்சிடக் கூடாது' என்று முருகானந்தம் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த மனுவில், கள்ள நோட்டுகள் மற்றும் ரூபாய் நோட்டில் கிறுக்குதல் போன்றவற்றால், காந்தியின் புகழுக்கு களங்கம் ஏற்படுகிறது. எனவே, ரூபாய் நோட்டில் காந்தியின் படத்தை அச்சிடக் கூடாது என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், அரசியல் சட்டப்படி தீவிர ஆலோசனைக்குப் பிறகே ரூபாய் நோட்டில் காந்தியின் படம் அச்சிடப்பட்டது என்று கூறி, வழக்கு தொடர்ந்தவருக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர். மேலும், இந்த வழக்கைத் தள்ளுபடிசெய்தனர்.
ரூபாய் நோட்டில் காந்தி படம்; வழக்கு தொடர்ந்தவருக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம்
TAGS :
COMMENTS