[ad_1]
‘மெர்சல்’ வசூலில் ரஜினியின் சாதனைகளை முந்துவாரா விஜய் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த வாரம் தீபாவளிக்கு ரிலீஸான ‘மெர்சல்’ படம், இந்தியாவில் மட்டுமின்றி உலக அளவில் வசூலைக் குவித்து வருகிறது. விஜய் நடித்துள்ள இந்தப் படத்தை, அட்லீ இயக்கியுள்ளார். தமிழ்நாட்டிலேயே பல சாதனைகளை முறியடித்துள்ள இந்தப் படம், மலேசியாவிலும் சாதனை படைத்துள்ளது.
மலேசியாவில் வெளியான தமிழ்ப் படங்களில், வசூல் அளவில் மூன்றாவது இடத்தைப் பிடித்திருக்கிறது ‘மெர்சல்’. ரஜினியின் ‘கபாலி’ முதல் இடத்திலும், ‘எந்திரன்’ இரண்டாம் இடத்திலும் உள்ளன. எந்திரனுக்கும், மெர்சலுக்கும் சில லட்சங்களே வேறுபாடு இருக்கும் நிலையில், இன்னும் சில நாட்களில் எந்திரனை மெர்சல் முந்திவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
[ad_2]
Source link
ரஜினியை முந்துவாரா விஜய்? | Webdunia Tamil
TAGS :
COMMENTS