[ad_1]
நீர் நிலைகளை காத்து, இயற்கை விவசாயத்தை பெருக்கிட வலியுறுத்தி தமிழகம் முழுவதும் இருசக்க வாகன விழிப்புஉணர்வு பிரச்சாரம் செய்து வருகிறது ஒரு தன்னார்வலர் குழு.
தமிழகத்தில் உள்ள நீர் நிலைகளை பாதுகாப்பது தொடர்பாகவும், இயற்கை விவசாயத்தை வலியுறுத்தியும், விவசாய கல்வியை பள்ளியில் கட்டாய பாடத்திட்டமாக்க வலியுறுத்தியும், சென்னை பைக் ரேஸ் நண்பர்கள் 6 பேர் கொண்ட குழு தமிழகம் முழுவதும் இருசக்கர வாகனத்தில் சென்று ஒவ்வொறு மாவட்டத்திலும் உள்ள விவசாயிகளை சந்தித்தும், பொது இடங்களில் இயற்கை விவசாய முறைகளை பற்றி விளக்கம் கொடுத்தும் மக்களை சந்தித்து வருகின்றனர். இக்குழுவினர் கடந்த 21-ம் தேதி சென்னையில் இருந்து புறப்பட்டு 12 மாவட்டங்களை கடந்து தேனி மாவட்டம் வந்தடைந்தனர்.
இன்று காலை உத்தமபாளையத்தில் பொதுப்பணித் துறை அலுவலகத்தில் உள்ள கர்ணல் ஜான் பென்னிக்குக் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து பின்பு பல பகுதிகளில் உள்ள விவசாயிகளை சந்தித்து இயற்கை விவசாயம் , நீர் நிலைகளை பாதுகாத்தல், பள்ளிகளில் விவசாயத்தை கட்டாய கல்வி ஆக்குதல் உள்ளிட்டவைகளை விவசாயிகள் மத்தியில் விழிப்பு உணர்வு பிரச்சாரத்தை செய்து மேலும் பள்ளி கல்லூரி பொது இடங்களில் இவர்கள் பயணம் குறித்த விழிப்புஉணர்வை ஏற்படுத்தி சென்றனர். தற்போது 1600 கிலோமீட்டர் தூரம் கடந்துள்ள இவர்கள் மேலும் 2000 கிலோ மிட்டர் வரை பயணம் செய்ய உள்ளதாக தெரிவித்தனர்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
விவசாயத்தை காத்திட ஓர் பயணம்.! - தேனி வந்த விழிப்புஉணர்வு குழு | A trip to save agriculture.
TAGS :
COMMENTS