[ad_1]

நாகர்கோவிலுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் தா.பாண்டியன் வந்திருந்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, மத்திய அரசு பணமதிப்பை ஏற்படுத்தி நவம்பர் 8-ம் தேதியுடன் ஒர் ஆண்டு நிறைவுபெறுகிறது. பண மதிப்பிழப்பால் கறுப்புப்பணம் ஒழியும், தீவிரவாதிகளிடம் உள்ள பணம் செல்லாமல் போகும் என அரசு அறிவித்தது. ஆனால் அப்படி எதுவும் இதுவரை நடைபெறவில்லை. பா.ஜ.க. தலைவர் யஷ்வந்த் சின்கா இதுகுறித்து புள்ளி விவரங்களை வெளியிட்டு பணமதிப்பிழப்பு தோல்வியை கொடுத்திருப்பதாக தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் ஆட்சியின்போது இந்தியாவின் கடன் குறைவாக இருந்தது. பணம் கையிலும் அதிகமாக இருந்தது. இதுபோன்ற பல கருத்துகளை மோடியை ஏற்றுக்கொண்டுள்ளார். இந்தியாவின் பெரும் புள்ளிகள் வெளி நாடுகளில் பல லட்சம் ஏக்கர் நிலங்கள், தொழிற்சாலைகள் வாங்கியுள்ளனர். தலைமைச் செயலாளர் மோகன் ராவ், சேகர் ரெட்டி வீடுகளில் நடத்திய வருமான வரித்துறை சோதனையில் கோடிக்கணக்கான பணம் கைப்பற்றப்பட்டது. ஆனால் அவை குறித்து இப்போது எந்தத் தகவலும் வெளிவரவில்லை. நவம்பர் 8-ம் தேதியைக் கறுப்பு தினமாக அனுசரித்து  நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். தமிழ்நாட்டை டெங்கு நோய் பாதித்துள்ளது.





ஏற்கெனவே தமிழகம் நோய்வாய்ப்பட்ட மாநிலமாக மாறிவிட்டது. இங்கு உள்ள பல நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு காரணமாக காணாமல் போய்விட்டன. அவற்றை மீட்க வேண்டும். தமிழகத்தில் டெங்கு கொசு கடிக்காத இடத்திலிருந்து அமைச்சர்கள் டெங்கு தமிழகத்தில் இல்லை என பேசுகிறார்கள். கூவம் கரையோரம் இருந்து அவர்கள் பேசவேண்டும். அப்போதுதான் அமைச்சர்களுக்குத் தெரியும். சர்க்கரை விலை ரேஷன் கடைகளில் அதிகரித்துள்ளது. 25 ரூபாய்க்கு சர்க்கரை விற்பதன் மூலம் ஏழைகள் அதிக விலை கொடுத்து சர்க்கரை வாங்க வேண்டும். ஆனால் வசதி படைத்தவர்கள் குறைந்த விலைக்கு சர்க்கரை வாங்க போகிறார்கள்' என்று அவர் தெரிவித்தார்.