
[ad_1]
அன்னை தெரசா மறைந்தபோது வெளிநாட்டு நிருபர்கள் அதிகளவில் கொல்கத்தாவுக்கு வந்திருந்தனர். அதன்பின், 20 ஆண்டுகளுக்குப் பிறகு முதன்முறையாக ஏரளாமான வெளிநாட்டு ஜர்னலிஸ்ட்கள் கொல்கத்தாவுக்குப் படையெடுத்துள்ளனர். காரணம், 17 வயதுக்குட்பட்டோருக்கான கால்பந்து உலகக் கோப்பை (#FIFAU17WC) (U17WCFINAL) ஃபைனல். ஒரு மாதமாக இந்தியாவில் நடந்த உலகக் கோப்பை திருவிழாவின் கடைசிநாள்.

கொல்கத்தாவில் செப்டம்பர் மாதமே துர்கா பூஜை முடிந்துவிட்டது. ஆனால், இன்னும் விழாக்கோலம் களையவில்லை. சால்ட் லேக் மைதானத்துக்குள் நுழையும் அத்தனை வழிகளிலும் கோலம். மணப்பெண் போல அலங்காரம் செய்த பெண் ஒருத்தி, அதில் அமர்ந்து செல்ஃபி எடுக்கிறாள். அதை விநோதமாகப் பார்த்து கடக்கின்றன வாகனங்கள். கொல்கத்தாவில் நடக்கும் போட்டியைக் காண்பதற்கான டிக்கெட் வைத்திருந்தால் சலுகை விலையில் உணவு என அசத்துகின்றனர் பெங்காலிகள். உலகக் கோப்பை ஃபைனலை நடத்த கொல்கத்தாவை விட சிறந்த நகரம் இருக்க முடியாது. நாக்கு மேல பல்லுப் போட்டு பேச முடியாத அளவுக்கு இருக்கின்றன ஏற்பாடுகள். பாதுகாப்பும் சரி, ஏற்பாடும் சரி எல்லாமே பக்கா.
_16274.jpg)
இனி மேட்ச் ப்ரிவியூ...
தென் அமெரிக்கா, ஐரோப்பா, ஆசியா, ஆப்ரிக்கா, ஒசானியா என ஐந்து கண்டங்கள் மோதிய இந்த உலகக் கோப்பையில், கடைசியில் மிஞ்சியது ஐரோப்பா மட்டுமே. பொதுவாக, ஆப்ரிக்க கண்டத்தில் உள்ள நாடுகளில் இளம் வீரர்கள் அதிகம் உருவெடுப்பர். அங்கிருந்து ஏராளமான எமெர்ஜிங் பிளேயர்கள் வருவார்கள். அதனால் ஏஜ் குரூப் டோர்னமென்ட்களில் ஆப்ரிக்க கண்டமே ஆர்ப்பரிக்கும். இந்த உலகக் கோப்பையிலும் கானா, மாலி அணிகள் பட்டையைக் கிளப்பின. ஐரோப்பா கண்டத்தில் உள்ள நாடுகள் இதற்கு நேர் எதிர். ஆனாலும், ஸ்பெயின் - இங்கிலாந்து என ஐரோப்பா கண்டத்தில் உள்ள அணிகளே ஃபைனலுக்கு முன்னேறி இருக்கின்றன. இரு அணிகளும் இதுவரை 17 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை வென்றதில்லை. ஸ்பெயின் நான்காவது முறையாக ஃபைனலுக்கு முன்னேறி இருக்கிறது. இங்கிலாந்துக்கு இது முதன்முறை.
_16503.jpg)
இந்தமுறை இங்கிலாந்து பக்கம் அதிர்ஷ்டக்காற்று. காலிறுதிக்கு முந்தைய சுற்றில் ஜப்பானுக்கு எதிராக பெனால்டி ஷூட் அவுட்டில் பெற்ற வெற்றியைத் தவிர்த்து மற்ற அனைத்துப் போட்டிகளும் அட்டகாசம். விளையாடிய ஆறு போட்டிகளில் 18 கோல்கள். அதில் நாக் அவுட் சுற்றில் மட்டும் அடுத்தடுத்து இரண்டு போட்டிகளில் ரியான் புருஸ்டர் ஹாட்ரிக் கோல்கள். இந்த டோர்னமென்ட்டில் அதிக கோல்கள் அடித்தவர். அவரைக் கட்டுப்படுத்த ஸ்பெயின் என்ன திட்டம் வைத்திருக்கிறது என்ற கேள்வி எழுகிறது. அதேநேரத்தில், ஆறு கோல்களுடன் இரண்டாவது இடத்தில் இருக்கும் அபெல் ரூயிஸ், ஸ்பெயின் வீரர். ஆக, டெக்னிக்கல் ரீதியாக இரு அணிகளும் பலம் வாய்ந்தவை.
பந்து அதிகநேரம் தங்கள் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும். அப்படி பந்தை வைத்திருக்க முடியவில்லையா? அடுத்த 30 விநாடிகளில் எதிரியிடம் இருந்து பந்தைப் பிடுங்க வேண்டும் என்பதுதான் ஸ்பெயின் அணியின் தியரி. துரிதமாக ஃபார்வேர்டில் முன்னேறி எதிரிணியின் டிஃபென்ஸை உடைப்பதில் அவர்கள் கில்லி. தவிர, விங்கில் இருந்து அக்யூரட் பாஸ் கொடுப்பது அவர்களின் பெரிய ப்ளஸ். ஃபெரன் டாரஸ் ரைட் விங்கிலும், செர்ஜியா கோமஸ் லெஃப்ட் விங்கிலும் கிராஸ் கொடுத்துக் கொண்டே இருப்பர். ஸ்பெயின் இதுவரை ஆறு போட்டிகளில் 15 கோல்கள் அடித்திருக்கிறது. ஸ்பெயினின் கோல் ஸ்கோரர்கள் பட்டியலில் ஆறு பேர் இருப்பதும் கவனிக்க வேண்டிய விஷயம். டிஃபென்ஸில் ஸ்பெயின் பலவீனம். ஆறு போட்டிகளில் ஐந்து கோல்கள் வாங்கியிருக்கிறது. ஃபிரான்ஸ், ஈரான், மாலி அணிகளுக்கு எதிரான நாக் அவுட் போட்டிகளில் திணறியது. இத்தனைக்கும் அந்த அணிகள் பல சான்ஸ்களை மிஸ் செய்தது. இங்கிலாந்து அப்படி இருக்காது. ஃபினிஷிங்கில் மிரட்டும் என்பதால் ஸ்பெயின் பின்களம் ஆட்டம் காணும்.

இங்கிலாந்தைப் பொறுத்தவரை, ஏஜ் குரூப்பில் உள்ள அணிகளை செமயாக வளர்த்து வருகிறது இங்கிலாந்து கால்பந்து சங்கம். அதனால்தான், ஐந்து மாத இடைவெளியில் அவர்களால் இரண்டு உலகக் கோப்பை ஃபைனல்களில் விளையாட முடிகிறது. ஆம், சமீபத்தில்தான் அண்டர் 20 உலகக் கோப்பை வென்றது இங்கிலாந்து. தவிர, குரோஷியாவில் மே மாதம் நடந்த அண்டர் 17 யூரோ கோப்பை ஃபைனலில், இந்த இரு அணிகளும்தான் மோதின. அதில் வழக்கம்போல ஷூட் அவுட்டில் இங்கிலாந்து சொதப்ப, கோப்பையை முத்தமிட்டது ஸ்பெயின். இந்தமுறை அப்படியொரு சூழலை ஏற்படுத்தக் கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறது இங்கிலாந்து.
COMMENTS