[ad_1]

பா.ஜ.க மத்தியில் ஆட்சியைப் பிடித்தபோது அமைச்சரவையில் கேரள மாநிலத்துக்கு பிரதிநிதித்துவம் இல்லாமல் இருந்தது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க வேட்பாளர்கள் யாரும் கேரளாவில் வெற்றி பெறாதது இதற்குக் காரணம். கடந்த சில மாதங்களுக்கு முன்பு மத்திய அமைச்சரவை மாற்றி அமைக்கப்பட்டது.




அப்போது முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி அல்போன்ஸ் கன்னம்தானத்தை பிரதமர் மோடி மத்தியச் சுற்றுலாத்துறை அமைச்சராக நியமித்தார். நாடாளுமன்றத்தின் இரு சபைகளிலும் உறுப்பினராக இல்லாத அல்போன்ஸ் கன்னதானம் உடனடியாகப் பதவி ஏற்றுக்கொண்டார். அதைத் தொடர்ந்து அல்போன்ஸ் கன்னம்தானத்தை ஏதாவது ஒரு தொகுதியிலிருந்து எம்.பியாகத் தேர்வு செய்யப்பட வேண்டிய சூழல் உருவானது.


இந்த நிலையில் ராஜஸ்தான் மாநிலத்திலிருந்து மேல்சபை எம்.பியாகத் தேர்வு செய்யப்பட்டிருந்த வெங்கையா நாயுடு கடந்த சில வாரங்களுக்கு முன்னர் ஜனாதிபதியாகத் தேர்வு செய்யப்பட்டார். அதனால், அவர் ராஜஸ்தான் மாநில மேல்சபை எம்.பி பதவியை ராஜினாமா செய்தார். அதைத் தொடர்ந்து அந்த எம்.பி பதவி காலியாக இருந்தது. அதற்கு தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலில் மத்திய அமைச்சர் அல்போன்ஸ் கன்னம்தானம் பா.ஜ.க வேட்பாளராக நிறுத்தப்படுகிறார். இதற்கான அறிவிப்பை பா.ஜ.கவின் தேசியத் தலைவர் அமித்ஷா அறிவித்துள்ளார். ராஜஸ்தானில் மொத்தம் 200 எம்.எல்.ஏ-க்களில் 160 பேர் பாஜக எம்.எல்.ஏ-க்கள். இதனால் அல்போன்ஸ் கன்னதானம் உறுதியாக வெற்றி பெறுவார். வேட்பு மனுத்தாக்கல் செய்ய வருகிற 6-ம் தேதி இறுதி நாள். இதில் போட்டி இருந்தால்தான் தேர்தல் நடைபெறும். போட்டி இல்லை என்றால் மத்திய அமைச்சர் அல்போன்ஸ் போட்டியின்றி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படுவார்.