[ad_1]

மத்திய டெல்லியில் கத்புட்டாலி காலனி என்கிற குடிசைப்பகுதியில் வாழும் மக்களை டெல்லி மேம்பாட்டு ஆணையம், காவல்துறையின் துணையுடன் அகற்ற முயன்று வந்தது. அந்தப் பகுதி மக்களை உடனடியாக அங்கிருந்து வெளியேற போலீஸார் உத்தரவிட்டனர். அப்போது, அங்கு சென்ற இந்திய மகளிர் தேசிய கூட்டமைபின் பொதுச்செயலாளர் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவரான ஆனி ராஜா  தாக்கப்பட்டிருக்கிறார்.





மேலும், அங்கு சென்ற மற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினரையும் காவல்துறை லத்தியால் அடித்து அங்கிருந்து விரட்டி இருக்கிறது. கும்பல் தாக்கியதில் தலை மற்றும் தோல்பட்டையில் காயமடைந்த ஆனி ராஜா, அரசு மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைப் பெற்று வருகிறார். கேரளாவைச் சேர்ந்த ஆனி ராஜா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் டி. ராஜாவுடைய மனைவி ஆவார். ஆனி ராஜா மீதான இந்தத்  தாக்குதலுக்கு பல்வேறு தரப்பும் கண்டனம் தெரிவித்திருக்கிறது.