[ad_1]
அமெரிக்க ரிசர்வ் வங்கியின் தலைவராக ரகுராம் ராஜன் நியமிக்கப்பட வேண்டுமென நிதித்துறை சார்ந்த பிரபல பத்திரிகை Barron கட்டுரை வெளியிட்டுள்ளது.
மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்காலத்தில், இந்திய ரிசர்வ் வங்கியின் கவர்னராக ரகுராம் ராஜன் நியமிக்கப்பட்டார். 2016-ம் ஆண்டு, அவரது பதவிக் காலம் முடிந்தது. அவரின் பதவிக் காலம் நீட்டிக்கப்படவில்லை. வெளிப்படையாக கருத்துகளை வெளியிடும் ரகுராம் ராஜனை பாரதிய ஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணியன் சுவாமி தொடர்ந்து விமர்சித்து வந்த நிலையில், உர்ஜித் பட்டேல் ரிசர்வ் வங்கி கவர்னராக நியமிக்கப்பட்டார். தற்போது, சிகாகோ பல்கலையில் நிதித்துறைப் பேராசிரியராக ரகுராம் ராஜன் பணியாற்றுகிறார்.
இந்நிலையில், நிதித்துறை சார்ந்த பத்திரிகை Barron வெளியிட்டுள்ள கட்டுரையில், ''அமெரிக்க ரிசர்வ் வங்கித் தலைவர் பதவியில் நியமிக்கப்பட ரகுராம் ராஜன் தகுதியானவர். விளையாட்டு அணிகள் வீரர்களை ஒப்பந்தம் செய்யும்போது, அவர் எந்த நாட்டவர் என்றெல்லாம் பார்ப்பதில்லை. திறமை, தகுதியை மட்டுமே கருத்தில் கொள்கின்றன. அதுபோலவே நாட்டின் தலைமை வங்கிகளும் தகுதியை அடிப்படையாகக் கொண்டு தலைவர் பதவியை நிரப்ப முன்வர வேண்டும். அமெரிக்க ரிசர்வ் வங்கித் தலைமைப் பொறுப்புக்கு ரகுராம் ராஜன் தகுதியானவர் '' என்று கூறியுள்ளது.
அமெரிக்க ரிசர்வ் வங்கித் தலைவராக தற்போது ஜேனட் பணியாற்றிவருகிறார். இந்தப் பதவியில் அமர்ந்த முதல் பெண் இவர். ஜேனட்டின் பதவிக் காலம் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் முடிவடைகிறது. அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ஜெரோம் பாவலை அமெரிக்க ரிசர்வ் வங்கியின் தலைவராக நியமிப்பார் என்று சொல்லப்படும் நிலையில், Barron எழுதியுள்ள கட்டுரை, ரகுராம் ராஜன் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
சமீபத்தில், ரகுராம்ராஜன் எழுதிய ‘ஐ டூ வாட் ஐ டூ’ புத்தகத்தில், 'பணமதிப்பிழப்பு நடவடிக்கையை ஆதரிக்கவில்லை' என்று கூறியிருந்தார்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
அமெரிக்க ரிசர்வ் வங்கித் தலைவராக ரகுராம் ராஜன்?
TAGS :
COMMENTS