[ad_1]
இந்தியாவின் தென் கோடியில் கன்னியாகுமரி மாவட்டம் இருக்கிறது. கடல் சார்ந்த சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்கவும், ஆயுதங்கள் மற்றும் போதைப் பொருள்கள் கடத்தப்படுவதை தடுக்கவும் சஜாக் ஆபரேஷன் கடலோர பாதுகப்புப் படையால் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி கன்னியாகுமரியில் சஜாக் ஆபரேஷன் சின்னமுட்டம் துறைமுகத்தில் இருந்து கடலோர பாதுகாப்பு குழும போலீஸ் இன்ஸ்பெக்டர் தலைமையில் நடத்துவார்கள். அவர்கள் கன்னியாகுமரி கடல் பகுதி மற்றும் கூடங்குளம் வரையிலான பகுதி வரை கண்காணிப்பில் ஈடுப்படுவார்கள்.
குமரி மாவட்டத்தில் ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரை 48 மீனவ கிராமங்கள் உள்ளன. இங்கு கிழக்கு கடற்கரையும் மேற்குக் கடற்கரையும் உள்ளன. கன்யாகுமரியில் கடலோர காவல் படை, கடலோர பாதுகாப்பு குழுமம் என கடல் பகுதி பாதுகாப்புக்கும் காவல் துறையின் பல்வேறு பிரிவுகளால் உள்நாட்டு பாதுகாப்பும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதில் கடலோர பாதுகாப்பு குழுமம் சார்பில் சின்னமுட்டம் துறைமுகத்தை தங்குதளமாக கொண்டு நான்கு அதி நவீன ரோந்து படகுகள் இயக்கப்பட்டு வருகின்றன. அங்கு காவலர்களுக்கான ஓய்வு அறையும் எரிபொருள் நிரப்பும் பகுதியும் அமைக்கப்பட்டுள்ளன.
இங்கிருந்து கடலோர பகுதிகளை கண்காணிப்பது, கடலில் மாயமான மீனவர்களை தேடுவது, கடலில் படகுகள் கவிழ்ந்தால் மீனவர்களை மேற்கு கரை கொண்டுவருவது, உள்ளிட்ட பல பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், அதி நவீன ரோந்து படகுகள் கடந்த சில வாரங்களாக பழுதடைந்து உள்ளன. இதனால் சின்னமுட்டம் மீன்பிடிப்பு துறைமுகத்தில் படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அதனால் கடல் ரோந்து பணிகளும் நடைபெறவில்லை. கடந்த சில நாள்களுக்கு முன்பு நடைபெற்ற சஜாக் ஆபரேஷன் கடல் மார்கமாக நடைபெறாமல் இருந்தது. இந்தியாவின் தென் எல்லையில் சர்வதேச சுற்றுலாத்தலமாக கன்னியாகுமரியில் அணுமின் நிலையமும் இருக்கின்றது. ஆனால் கடலோர பாதுகாப்புதான் கேள்விகுறியாக இருக்கிறது. கன்னியாகுமாரி கடலோர பாதுகாப்பு குழும அதிநவீன ரோந்து படகுகளை உடனடியாக சரி செய்து மீண்டும் கடலோர பாதுகாப்பு பலப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
கன்னியாகுமரியில் கடலோர பாதுகாப்புப் படகுகள் சரிசெய்யப்படுமா?
TAGS :
COMMENTS