[ad_1]
சரக்கு மற்றும் சேவை வரி நடைமுறைக்கு வந்து மூன்று மாதங்களான பின்னும், வியாபாரிகளுக்கு இன்னும் அது பிடிபடாமல் உள்ளது. மத்திய அரசும் பல வகையில் ஜி.எஸ்.டி.யைப் பற்றி விளம்பரங்கள் மூலமும், கருத்தரங்குகள் மூலமும் விளக்கி வருகிறது. இருந்தாலும் வியாபாரிகளுக்கு இன்னும் புரிந்தபாடில்லை.
இந்த நிலையில், மதுரையிலுள்ள சிறு வியாபாரிகள் முதல், நடுத்தர மற்றும் பெருவியாபாரிகள் பயன்பெறும் வகையிலும் அவர்களுக்கு எளிமையாகப் புரியும் வகையிலும் ஜி.எஸ்.டி. பற்றிய பயிற்சி வகுப்பை, உணவுப்பொருள் கருத்தரங்கை, தமிழ்நாடு உணவுப்பொருள் வியாபாரிகள் சங்கம், மதுரை மாவட்ட சிறு மற்றும் குறுந்தொழில்கள் சங்கத்துடன் இணைந்து நடத்தியது.
வியாபாரிகள் ஜி.எஸ்.டி. -2, ஜி.எஸ்.டி.ஆர் - 3 , ட்ரான் 1, ட்ரான் 2 பற்றிய சந்தேகங்களைக் கேட்டுத் தெரிந்துகொண்டார்கள். மிக விரைவில் அனைவரும் ஜி.எஸ்.டி.யை நடைமுறைபடுத்த வேண்டுமென்பதால், அனைத்து வியாபாரிகளும் வந்திருந்தனர். இதற்கான ஏற்பாடுகளை உணவுப்பொருள்கள் வியாபாரிகள் சங்கத்தலைவர் ஜெயப்பிரகாசம், செயலாளர் வேல்சங்கர் செய்திருந்தனர். ஜி.எஸ்.டி துறை அதிகாரிகள் வந்திருந்து சந்தேகங்களுக்கு விளக்கமளித்தனர்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
மதுரையில் வியாபாரிகளுக்காக தொடர்ந்து நடக்கும் ஜி.எஸ்.டி. விளக்கக் கூட்டங்கள்!
TAGS :
COMMENTS