[ad_1]

108 திவ்ய தேசங்களில் 63வது திவ்ய தேசமாக மாமல்லபுரம் ஸ்தலசயன பெருமாள் கோவில் அழைக்கப்படுகிறது. திருப்பாற்கடலில் வைகுண்டநாதனாக, பாம்பணையின் மீது சயனித்து பக்தர்களின் பாவங்களைக் களைந்து வருகிறார் பள்ளிகொண்ட பெருமாள். ஆனால் கடல் மல்லையில், வெறும் தரையில் சயனித்தபடி பக்தர்களுக்கு திருமால் அருள்புரிந்து வருகிறார். பல்லவர் காலத்தில் கட்டப்பட்ட கடற்கரை கோவிலில் சிவனும், விஷ்ணுவும் ஒன்றாக காட்சியளிக்கிறார்கள்.  கடற்கரை கோவில் சிதிலமடைந்த நிலையில், 14ம் நூற்றாண்டை சேர்ந்த விஜயநகர மன்னர்களில் ஒருவரான பராங்குச மன்னன், ஊரின் மத்தியில் கோவிலை எழுப்பி வழிபாடு நடத்த தொடங்கினார்.

பன்னிரு ஆழ்வார்களுக்கும் இக்கோவிலில் தனித்தனியாக சன்னதி இருக்கின்றன. முதல் மூவரில் நடுவரான பூதத்தாழ்வார் அவதரித்த இடம் என்பது சிறப்பு. இங்கே 20 பாடல்களை திருமங்கை ஆழ்வார் பாடியிருக்கிறார். மாமல்லபுரத்தில் வருடத்தில் பத்துநாட்கள் பூதத்தாழ்வாரின் அவதார உற்சவம் நடைபெறும். 9ம்நாளான இன்று பூதத்தாழ்வார் மாமல்லபுரத்தில் வீதிஉலா வந்தார். தேரில் வீதியுலா வந்த பூதத்தாழ்வாரை பக்தர்கள் வடம்பிடித்து வேண்டுதலை நிறைவேற்றினர். உள்ளூர் மக்களோடு வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளும் பூதத்தாழ்வாரை தரிசனம் செய்தனர்.