[ad_1]
காஞ்சிபுரத்தில் உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில், காவல் அலுவலர்கள் குறை கேட்பு முகாம் இன்று நடைபெற்றது. இதில் வடக்கு மண்டலத்தை சேர்ந்த காஞ்சிபுரம், திருவள்ளுவர், திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம், வேலூர் மாவட்டங்களில் பணியாற்றும் காவல் அலுவலர்கள் கலந்து கொண்டனர். தமிழ்நாடு காவல்துறை இயக்குனர் T.K.ராஜேந்திரன் இதற்கு தலைமை தாங்கினார். வடக்கு மண்டல ஐ.ஜி ஸ்ரீதர் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் இதில் கலந்து கொண்டனர்.
காவல்துறையை சேர்ந்த 475 பேர் இதில் தங்களது கோரிக்கைகளை வைத்தனர். இதில். 275 பேர் பணியிடமாற்றத்துக்காகவும், 18 பேர் பணி உயர்வுக்காகவும், 182 பேர் இதர கோரிக்கைகளுக்காகவும் விண்ணப்பித்திருந்தனர். நிகழ்ச்சியில் பேசிய காவல்துறை இயக்குநர் T.K.ராஜேந்திரன், “காவலர்கள் பல்வேறு குறைகளை இந்த குறை தீர்ப்பு கூட்டத்தில் தெரிவித்திருக்கிறீர்கள். பணியிட மாற்றம் குறித்துதான் அதிக அளவில் கோரிக்கைகள் வந்திருக்கின்றன. வடக்கு மண்டல சரகத்திற்கு உட்பட்ட காவலர்களுக்கு இட மாற்றம் குறித்து விரைவில் பரிசீலிக்கப்படும். அடுத்த மண்டலத்திற்கு பணியிடமாற்றம் குறித்த மனுக்கள் மீது அந்தந்த பகுதி டிஐஜிக்கள் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும். உங்கள் பிரச்னைகளை நாங்கள் உடனடியாக தீர்த்து வைக்கிறோம். அதுபோல் பிரச்னை என்று உங்களை நாடிவரும் பொதுமக்களின் குறைகளை உடனடியாக தீர்த்து வைக்க நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்." என்றார்.
“மக்கள் பிரச்னைகளை உடனடியாக தீர்த்து வையுங்கள்” காவல்துறையினருக்கு டி.ஜி.பி. அறிவுறுத்தல்!
TAGS :
COMMENTS