[ad_1]

Ariyalur: ஐந்தாம் வகுப்பு மாணவிக்குப் பாலியல் தொந்தரவு செய்த அரசுப் பள்ளியின் தலைமையாசிரியர் காவல்துறையினரால் கைது செய்யபட்டார். 

        


அரியலூர் மாவட்டம் காரைப்பாக்கத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் தலைமையாசிரியராக இருப்பவர் ஜான் அலெக்ஸ். இப்பள்ளியில் ஐந்து ஆண்டுகளாகப் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் அப்பள்ளியில் 5-ம் வகுப்பு படிக்கும் மாணவி ஷாலினி (பெயர் மாற்றபட்டுள்ளது) என்ற சிறுமி தனது வீட்டில் பெற்றோரிடம் தனக்கு உடல் நலமில்லை என்பதை மழலையில் கூறி அழுதுள்ளார். 

பெற்றோர்கள் குழந்தை உடல்நலமில்லாமல் இருப்பாதாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றிருக்கிறார்கள். மருத்துவர்கள் சிறுமியிடம் விசாரித்த போது குழந்தை தனக்கு நடந்த கொடுமையை விவரித்துள்ளார். பின்னர் மருத்துவர்கள் மூலமாக அச்சிறுமி படித்து வந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் செய்த கொடுமைகள் வெளிவந்தன. 


அதிர்ச்சியடைந்த பெற்றோர் திருமானூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். போலிஸார் வழக்குப் பதிவு செய்து தலைமையாசிரியர் ஜான் அலெக்ஸை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதனையடுத்து அவருக்கு 15 நாள்கள் நீதிமன்றக் காவல் விதித்து நீதிபதி உத்தரவிட்டார். 5-ம் வகுப்பு பள்ளிச் சிறுமியை அப்பள்ளியின் தலைமையாசிரியரே பாலியல் தொந்தரவு செய்துள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.