[ad_1]
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி, கனமழை பெய்து வருகிறது. கடந்த இரண்டு நாள்களாக கடலோர மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. இதனால் நேற்று சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளிகளுக்கு விடுமுறை வழங்கி மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறப்பித்தது.
நேற்று பகலில் மழை அதிகம் பெய்யாத நிலையில், நள்ளிரவு தொடங்கி விடிய விடிய சென்னையில் மழை பெய்த்தது. இதனால் பல இடங்களில் தண்ணீர் தேங்கியது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், நாகை, கடலூர் ஆகிய மாவட்டங்களில் இரண்டாவது நாளாக இன்றும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
“பள்ளிகளில் மழை தண்ணீர் தேங்கி உள்ளது. அதனை வெளியேற்ற தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பள்ளிகளில் தண்ணீர் தேங்கி உள்ளதால் இன்றும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது ” என சென்னை மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் தெரிவித்தார்.
தமிழகத்தில் பரவலாக அனைத்து இடங்களிலும் நேற்று மழை இருந்தது. இன்னும் மூன்று நாள்களுக்கு மழை பெய்ய வாய்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் நள்ளிரவு தொடங்கி விடிய விடிய மழை; இன்றும் பள்ளிகளுக்கு விடுமுறை
TAGS :
COMMENTS