[ad_1]







எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவுக்கு பள்ளி மாணவர்களை அழைத்து செல்வதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் பதில் அளிக்க தமிழக தலைமைச்செயலர், டி.ஜி.பிக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.உயர் நீதிமன்ற மதுரை கிளையில், தேனியைச் சேர்ந்த செல்வம் என்பவர் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல்செய்துள்ளார். அதில்,  "நான் அ.தி.மு.க அம்மா பேரவையின் உறுப்பினராக உள்ளேன்.  கடந்த செப்டம்பர் 28-ல் பொதுநல வழக்கு ஒன்றில், அரசியல் நிகழ்ச்சிகளுக்கு பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளை வருமாறு கட்டாயப்படுத்தக்கூடாது. அவர்கள் விருப்பத்தின் பேரில் பெற்றோருடன் அந்த நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள தடுக்கக்கூடாது என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. கடந்த அக்டோபர் 24 -ல், தேனியில் நடைபெற்ற எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் கலந்துகொள்ள அரசுப் பள்ளி, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளி மாணவ, மாணவிகளை அழைத்துவருமாறு உள்ளூர் அரசியல்வாதிகள் கட்டாயப்படுத்தியுள்ளனர்.



மேலும், பெற்றோரின் அனுமதியின்றி அழைத்துச் சென்றனர்.  ஒரு சில பள்ளிகளில், அரசியல்வாதிகளே குழந்தைகளை அழைத்துச் செல்ல மட்டும்  பேருந்து வசதிகளை ஏற்படுத்தி இருந்தனர். மாணவர்களை அழைத்துச்செல்ல பெற்றோருக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது. அக்டோபர் 23-ல் உயிரோடிருப்பவர்களுக்கு பேனர்கள், பிளக்ஸ் போர்டுகள் ஆகியவற்றை வைக்கக்கூடாது என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால், 24-ம் தேதி நடைபெற்ற நூற்றாண்டு விழாவில், அதிக அளவில் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன.  ஆகவே, நவம்பர் 5ல் தேனி, போடி விலக்குப் பகுதியில் நடைபெறும் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் கலந்துகொள்ளத் தடை விதிக்க வேண்டும். மேலும், தமிழகத்தில் விளையாட்டு, கல்வி தொடர்பான விழாக்களன்றி, பிற அரசியல் விழாக்களில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் கலந்துகொள்ளத் தடை விதிக்க வேண்டும்" என மனுவில் கூறியிருந்தார்.இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், இதுகுறித்து தமிழக தலைமைச்செயலர், டி.ஜி.பி பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை நவம்பர் 3 -ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்