[ad_1]
நகைகளுக்காக மூதாட்டியை கொன்ற பட்டதாரி பெண்ணுக்கு ஆயுள் தண்டனை வழங்கியுள்ளது திருச்சி மகிளா நீதிமன்றம்.
கடந்த 2015 பிப்ரவரி 2-ம் தேதி, திருச்சி பட்டர்வர்த் சாலையில் குடியிருந்துவரும் நளாயினி என்பவரின் அம்மா 80 வயது மூதாட்டி முத்துரத்தினவதி, அவரது வீட்டின் டைனிங் ஹாலில் வயிற்றில் காயங்களுடன் ரத்தம் வெள்ளத்தில் கொலை செய்யப்பட்டு பிணமாகக் கிடந்தார்.
அன்று உறவினர் வீட்டு திருமணத்துக்குச் சென்று வீடுதிரும்பிய நளாயினியும் அவரது மகனும் பார்த்தபோது, முத்துரத்தினவதி அணிந்திருந்த 5 பவுன் தாலி செயின், 3 பவுன் வளையல்கள், ½ பவுன் தோடு உள்ளிட்டவை திருடப்பட்டு இருந்தது. நகைகளுக்காக மூதாட்டி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்கிற கோணத்தில் விசாரணையை துவக்கிய கோட்டை காவல் நிலைய போலீஸார், அப்போதைய இன்ஸ்பெக்டர் சௌந்தர்ராஜன், நளாயினி வீட்டு மாடியில் பெற்றோருடன் வசித்து வந்த 22 வயது பட்டதாரி பெண்ணான திவ்யபிரியா, பக்கத்து வீட்டு பூக்களை பறித்தபோது, கடுமையான திட்டிய முத்துரத்தினவதி பாட்டியம்மாள் மீது கோபம் கொண்டவர், அவரை பின்தொடர்ந்து அவரது வீட்டிற்குள் நுழைந்து, அவரை கீழே தள்ளி கத்தியால் குத்திக் கொன்று அவரின் 8½ பவுன் தங்க நகைகளை எடுத்துச் சென்றதும் தெரியவந்தது. அடுத்து கைது செய்யப்பட்ட திவ்யபிரியா, சிறையிலடைக்கப்பட்டார்.
தற்போது அந்த வழக்கின் விசாரணை முடித்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, திருச்சி மகிளா நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இவ்வழக்கின் விசாரணை முடித்து இன்று மகிளா நீதிமன்ற நீதிபதி ஜெசிந்தா மார்ட்டின், “குற்றவாளி திவ்ய பாரதி, கொலை செய்யும் நோக்கில் அத்துமீறி வாதியின் வீட்டிற்குள் சென்ற குற்றத்திற்காக 10 ஆண்டுகள் சிறை தண்டணையும், கொலை குற்றத்திற்காக ஆயுள் தண்டணையும், கொலைக்கு பின் நகைகளை திருடிய குற்றத்திற்காக 7 ஆண்டுகள் சிறை தண்டணையும், ரூபாய் 3,000/- அபராதமும் விதித்து, தண்டணையை ஏககாலத்தில் அனுபவிக்க உத்தரவிட்டு தீர்ப்பு வழங்கினார்.
நகைக்காக மூதாட்டியை கொலை செய்த பட்டதாரிப் பெண்ணான திவ்யபாரதிக்கு தண்டனை வழங்கப்பட்டதால் திருச்சி நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு நிலவியது.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
நகைகளுக்காக மூதாட்டியைக் கொன்ற பட்டதாரி பெண்ணுக்கு ஆயுள் தண்டனை!
TAGS :
COMMENTS