[ad_1]




'கனடாவில் எவ்வளவு பெரிய விஷயத்தை செய்து முடித்திருக்கிறேன். அதைப் பற்றிக் கேட்காமல் இன்னும் எத்தனை நாட்களுக்குத் தான் அரசியலைப் பற்றியே கேட்பீர்கள்' எனப் பத்திரிகையாளரிடம் அரசு கொறடா கொந்தளித்துள்ளார்.  

                                         



கடனா நாட்டில் நடைபெற்ற காமன்வெல்த் பார்லிமென்டரி கருத்தரங்கத்தில் தமிழகத்தின் சார்பில் கலந்து கொண்ட அரசு தலைமை கொறடா தாமரை.ராஜேந்திரன் சென்னையிலிருந்து வைகை விரைவு ரயில் மூலம் அரியலூர் வந்தார். ரயில் நிலையத்தில் வந்திருங்கிய அவருக்கு அ.தி.மு.க-வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அரசு தலைமைக் கொறடா ராஜேந்திரன், ’கடனாவில் நடைபெற்ற காமன்வெல்த் பார்லிமென்டரி கருத்தரங்கில் இந்தியாவின் சார்பில் கலந்துக் கொண்ட மூன்று பேரில் தமிழகத்தின சார்பில் நான் கலந்துக் கொண்டேன் என்பதில் மிக்க மகிழ்ச்சி. கருத்தரங்கில் காமன்வெல்த் நாடுகளின் பொருளாதார சூழ்நிலை மற்றும் நாடுகளின் வளர்ச்சி குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும் காமன்வெல்த் நாடுகளின் பொருளாதார வளர்ச்சி எவ்வாறு உள்ளது, பொருளாதார வளர்ச்சியில் நாடுகளுக்கிடையே உள்ள போட்டி எவ்வாறு உள்ளது என்பது குறிதது விரிவாக விவாதிக்கப்பட்டது. 

பொருளாதார வளர்ச்சியை அதிகரிப்பதற்கான திட்ட அறிக்கையும் வழங்கப்பட்டுள்ளது. மற்ற நாடுகளை விட இந்தியாவின் வளர்ச்சி நன்றாக உள்ளது. மக்கள் தொகை அதிகமாக இருந்தாலும் அவர்களுக்கான அடிப்படை வசதிகளை செய்து தர அரசின் சார்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவது குறித்தும் விவாதிக்கப்பட்டது. உலகளவில் அனைத்துத் துறைகளிலும் இந்தியா வளர்ச்சியடைந்து வருவதாகவும் அவ்வளர்ச்சியை ஊக்கப்படுத்த அலோசனைகளை அறிக்கையாக வழங்கி உள்ளார்கள். அவ்வறிக்கை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் வழங்கினேன்” என்று கூறினார்.


தமிழக அரசியல் குறித்து பத்திரிக்கையாளர்கள் கேள்வி எழுப்பிய போது ’கனடா போய் எவ்வளவு பெரிய விஷயத்தை செஞ்சிட்டு வந்திருக்கிறோம் அதைப் பற்றிக் கேட்காமல் இன்னும் எத்தனை நாட்களுக்குத் தான் அரசியலைப் பற்றிக் கேட்பீர்கள்’ என்று காட்டமாக பேசினார்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்