[ad_1]
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வட கிழுக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. குறிப்பாக, வட மாவட்டங்களில் கடந்த 24 மணி நேரமாக தொடர் கன மழை பெய்து வருகிறது. மேலும், சென்னையில் பெய்து வரும் தொடர் மழையால், நள்ளிரவு வரை முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது.
சென்னை வானிலை மையத்தின் அறிவிப்பின் படி இந்த ஆண்டின் வடகிழக்குப் பருவமழை கடந்த 27-ம் தேதி தொடங்கியிருக்கிறது. இதனால், கடந்த இரண்டு நாள்களாக அவ்வப்போது விட்டு விட்டு பெய்த மழை, 30-ம் தேதி காலை முதல் அடைமழையாக மாறியிருக்கிறது. சென்னை வானிலை மையத்தின் கணிப்பின்படி நேற்று முதல் தமிழகத்தின் வட கடலோரப் பகுதிகளில் கனமழை முதல் மிகக் கனமழை வரை பெய்யத் தொடங்கும் என்று சொல்லப்பட்டது. அதன்படி சென்னையில் நேற்று அதிகாலை முதல் கனமழை பெய்து வருகிறது. வரும் 5-ம் தேதி வரை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
நிலைமை இப்படியிருக்க, சென்னையில் பெய்து வரும் கன மழையால் முக்கிய சாலைகளில் நள்ளிரவு வரை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக ஜி.எஸ்.டி.சாலை, ஓ.எம்.ஆர் சாலை, பூந்தமல்லி சாலைகளில் பல மணி நேரங்களாக போக்குவரத்து நெரிசல் நிலவிவருகிறது.
சென்னையில் தொடர் மழை: முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல்!
TAGS :
COMMENTS