[ad_1]
நாகர்கோவில் அருகில் பாம்பன்விளை ரேஷன் கடை உள்ளது. வழக்கம்போல ரேஷன் கடை ஊழியர் மணி பொதுமக்களுக்கு பொருள்களை விநியோகம் செய்துவிட்டு ரேஷன் கடையை பூட்டிவிட்டு சென்றுள்ளார். இந்நிலையில் நேற்று காலை ரேஷன் கடையின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டது கிடந்தது. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் ரேஷன் கடை ஊழியர் மணிக்கு தகவல் கொடுத்தனர். அவர் ரேஷன் கடைக்கு வந்தப்போது கடையை உடைத்து கொள்ளை நடந்திருப்பது தெரியவந்தது.
ரேஷன் கடையில் 50 கிலோ எடை கொண்ட இரண்டு அரிசி மூட்டைகள் மற்றும் 50 கிலோ எடை கொண்ட சீனி மூடை ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து ரேஷன் கடை ஊழியர் மணி இராஜாக்கமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீஸாரும், கைரேகை நிபுணர்களும் ரேஷன் கடைக்கு வந்து சோதனை செய்தனர். தற்போது கன்னியாகுமரி மாவட்டத்தில் மழை அதிகமாக செய்து வருகிறது. அதுபோல கன்னியாகுமரி மாவட்ட போலீஸார் மருது சகோதர்கள் விழாவிற்கும் தேவர் குருபூஜைக்கு தொடர்ச்சியாக சென்று கொண்டிருப்பதால் ரோந்து பணிகள் மந்தமாக உள்ளது. இதனை பயன்படுத்தி கொள்ளையர்கள் கை வரிசை காட்டி வருகின்றனர் .
நாகர்கோவிலில் ரேஷன் கடையை உடைத்துக் கொள்ளை
TAGS :
COMMENTS