[ad_1]
கந்துவட்டியை ஒழிக்கத் தேசிய அளவில் சட்டம் இயற்ற வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
சேலத்தில் நடைபெற்ற வி.சி.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்துக்கு வந்த அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது, ’வரும் நவ.8ம் தேதியோடு பண மதிப்பு நீக்கம் செய்து ஒரு வருடம் நிறைவு பெறுகிறது. பிரதமர் மோடியின் பண மதிப்பிழப்பு நடவடிக்கை அப்போது பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. கருப்பு பணத்தை ஒழிப்பதற்காகவும், அயல்நாட்டு வங்கிகளில் முடக்கப்பட்டிருக்கும் பணத்தை மீட்டு கொண்டு வருவதற்காகவும் அந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக பிரதமர் மோடி கூறினார். அயல்நாட்டு வங்கிகளில் இருந்து ஒரு ரூபாய் கூட இதுவரை மீட்கப்படவில்லை. ஆனால், உழைக்கும் மக்களிடமிருந்த 500, 1,000 ரூபாய் நோட்டுகளை செல்லாமல் ஆக்கினார். இதனால் புரட்சிகரமான பொருளாதாரம் எட்டும் என்றும் மோடி சொன்னார். மன்மோகன் சிங் ஆட்சி காலத்தில் 8.3 சதவீதமாக இருந்த ஜி.டி.பி., இன்று 5.3 சதவீதமாக குறைந்து விட்டது. இந்த பண மதிப்பிழப்பு நடவடிக்கையை எதிர்கட்சிகள் கூட எதிர்க்காத போது விடுதலை சிறுத்தைகள் கடுமையாக எதிர்த்து. அதற்காக மாநாடும் போட்டது. நாட்டின் பொருளாதார நிலை இன்று மோசமான நிலைக்கு சென்றுவிட்டது. மோடியின் எதேச்சதிகாரத்தை இது காட்டுகிறது. இதனால் பலர் வேலை இழந்திருக்கிறார்கள். பல சிறிய தொழில்கள் அழிந்து விட்டது. அதனால் வரும் நவம்பர் 8ம் தேதி தேசிய கருப்பு தினமாக எதிர்கட்சிகளான காங்கிரஸ், கம்யூனிஸ்ட்கள் அறிவித்து இருக்கிறார்கள். இதை விடுதலை சிறுத்தைகள் வரவேற்பதோடு, ஆதரவும் தருகிறது. நாங்கள் அந்த தினத்தை கருப்பு தினமாக கடைபிடிக்க இருக்கிறோம்.ஒரு முனை வரிவிதிப்பு பெரிய பாதிப்பு ஏற்படுத்தியுள்ளது. ஜி.எஸ்.டியின் கீழ் அதிகப்படியாக 28 சதவிகிதமும் குறைந்த அளவாக 5 சதவிகிதமும், சில பொருட்களுக்கு வரியும் இல்லை. இதனால் சாதாரண மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த ஒரு முனை வரி விதிப்பு பன்னாட்டு நிறுவனங்களுக்கு சாதகமாக இருக்கிறது. நடிகர் விஜய் நடித்த மெர்சல் படத்தில் வசனத்தால் பாரதிய ஜனதா கட்சியினர் போராட்டம் நடத்துகிறார்களே என்று என்னிடம் கேள்வி கேட்டார்கள். தணிக்கை குழுவை எதிர்த்து போராடலாம் விஜய்-யை எதிர்த்து போராடுவது அவரை வளைத்து போடுகின்ற எண்ணமா என்று சொன்னேன். அதற்கு பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் இப்படி பேசுவார் என்று எதிர்பார்க்கவில்லை. தனிமனித தாக்குதல் அரசியல் நாகரிகம் அற்ற செயல். பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த ஹெச்.ராஜா பேசுவது அவர் வயதுக்கும், வளர்ச்சிக்கும் மிகப் பெரிய இடைவெளி இருப்பதைக் காட்டுகிறது. அதே கட்சியில் மூத்த நிர்வாகிகளான இல.கணேசன், பொன். ராதாகிருஷ்ணன் போன்றோர் இப்படி கரடு முரடான சொற்களை பயன்படுத்த மாட்டார்கள். நாங்கள் அரசியல் நாகரிகம் கருதி அமைதியாக இருக்கிரோம். ஒடுக்கப்பட்ட மக்களுக்காக கட்சி நடத்தும் எங்களை ஏற்கனவே ராமதாஸ், கட்டப்பஞ்சாயத்து செய்வதாக பரப்புரை செய்தார். தற்போது தமிழிசையும் சொல்லுகிறார். தொண்டர்கள் ஒரே மாதிரி இருக்க மாட்டார்கள்.
கந்துவட்டி ஊழல், மதுவை விட கொடுமையானது. அதை ஒழிக்க தேசிய அளவில் சட்டம் இயற்ற வேண்டும். தமிழக அரசு எம்.ஜி.ஆர்., நூற்றாண்டு விழா கொண்டாடும் இந்த தருணத்தில் அவரின் கொள்கைக்கு எதிராக செயல்படுகிறது. அவர் ஆட்சி காலத்தில் சந்தையில் பொருட்களின் விலை அதிகரித்தாலும், ரேசனில் பொருட்களின் விலை அதிகப்படுத்த கூடாது என்றார். ஆனால் தமிழக அரசு ரேஷனில் சக்கரையின் விலையை இரு மடங்காக உயர்த்தி இருக்கிறது. டெங்கு ஒழிப்பதாக சொல்லி தனியார் நிறுவனங்கள் மீது அபராதம் விதிப்பது ஓரவஞ்சனை செயல். தனியார் நிறுவனங்களை அச்சுறுத்தும் செயல். கமலஹாசன் அரசியல் வருவதை வரவேற்கிறோம்'' என்றார். உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
’கந்துவட்டியை ஒழிக்கத் தேசிய அளவில் சட்டம்’ - திருமாவளவன் வலியுறுத்தல்
TAGS :
COMMENTS