[ad_1]

Coimbatore: அ.தி.மு.க அரசு தங்களது சுயநலத்துக்காக, மாநில சுய உரிமைகளை பறிகொடுத்துள்ளதாக, ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.




பேரறிஞர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு, கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில், மாணவ, மாணவிகளுக்கு, பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, கவிதைப் போட்டி மற்றும் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு, தி.மு.க செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் பரிசு வழங்கினார். பின்னர் அவர் பேசுகையில், “நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல, மாணவர்கள் முன்வரவேண்டும்.

இந்தித் திணிப்பை எதிர்த்து தமிழகத்தில் நடைபெற்ற, இந்தி எதிர்ப்பு போராட்டம் வரலாற்றில் மிகவும் முக்கியமானது. அதேபோல, ஜல்லிக்கட்டுக்காக, மாணவர்கள் நடத்திய தன்னெழுச்சியான போராட்டமும் முக்கியமானது. ஆனால், தற்போது ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்ற சுயநல நோக்கில், மாநில உரிமைகளை அ.தி.மு.க அரசு பறிகொடுத்து வருகிறது.



சமீபத்தில்தான், குடியரசுத் தலைவர் மற்றும் குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல் நடைபெற்றது. அ.தி.மு.க-விடம் 50 எம்.பி-க்கள் உள்ளனர். அவர்கள் நினைத்திருந்தால், நீட் தேர்வில் இருந்து எங்களுக்கு விலக்கு தந்தால்தான், தேர்தலில் ஆதரவளிப்போம் என்று கூறியிருக்க முடியும். அதை இவர்கள் செய்யவில்லை” என்றார்.


இந்த நிகழ்ச்சியில், கோவை, நீலகிரி, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த தி.மு.க நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு காங்கேயம் சென்ற ஸ்டாலின், அங்கு மதிய உணவை உட்கொள்கிறார். இதையடுத்து, அவர் தேவர் குரு பூஜைக்காக கமுதிக்கு செல்கிறார்.