[ad_1]





எழுத்தாளர் மேலாண்மை பொன்னுசாமியின் இழப்பு உழைக்கும் மக்களுக்கும் முற்போக்கு இயக்கங்களுக்கும் பேரிழப்பு என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். 





பிரபல எழுத்தாளர் மேலாண்மை பொன்னுச்சாமி, நேற்று காலை மரணமடைந்தார்.  இவரது மறைவு, இலக்கிய உலகில் பெரும் இழப்பாகப் பார்க்கப்படுகிறது. 2007-ம் ஆண்டில் சாகித்திய அகாடமி விருது வென்றவர், இன்னும் பல விருதுகளை வென்றுள்ளார். இலக்கிய உலகின் முக்கியமான ஒருவராக விளங்கிய பொன்னுசாமி, தனது வாழ்வை மார்க்சிஸ்ட் கட்சியோடு இணைத்துக் கொண்டு வாழ்ந்தார். இந்தநிலையில், அவரது இறப்புக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் இரங்கல் தெரிவித்துள்ளார்.இதுதொடர்பான அவருடைய ட்விட்டர் பதிவில், 'தமிழின் முக்கியமான எழுத்தாளர் மேலாண்மை பொன்னுசாமி மறைவுக்கு இரங்கல் தெரிவித்துக்கொள்கிறேன். சாகித்திய அகாடமி விருதுவென்ற மேலாண்மை பொன்னுசாமி, இலக்கிய உலகில் உழைக்கும் மக்களுக்கு அங்கீகாரம் கிடைக்க பாடுபட்டவர். மேலாண்மை பொன்னுசாமியின் இழப்பு, இந்த நாட்டிலுள்ள உழைக்கும் மக்களுக்கும் முற்போக்கு இயக்கங்களுக்கும் பேரிழப்பு' என்று பதிவிட்டுள்ளார். 
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்