[ad_1]




பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் மலர்வளையம் வைத்து அஞ்சலிசெலுத்தினர்.
 பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 110-வது ஜெயந்தி விழாவும் 55-வது குருபூஜை விழாவும் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, அவரது நினைவிடம் அமைந்துள்ள பசும்பொன்னில் ஆயிரக்கணக்கானோர் அஞ்சலிசெலுத்த கூடியுள்ளனர்.

இன்று காலை, பசும்பொன் தேவர் நினைவிடத்திற்கு வருகைதந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜு, ஓ.எஸ்.மணியன், ஆர்.பி. உதயகுமார், காமராஜ், பாஸ்கரன், மணிகண்டன், பாராளுமன்ற உறுப்பினர் அன்வர்ராஜா ஆகியோர், தேவர் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலிசெலுத்தினர். அதைத் தொடர்ந்து, தேவர் நினைவு இல்லத்தை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் பார்வையிட்டனர்.


 
 

முன்னதாக, பசும்பொன்னிற்கு வருகைதரும் முதல்வருக்கு எதிர்ப்பு தெரிவித்து, டி.டி.வி. தினகரன் ஆதரவாளர்கள்கூட உள்ளனர் என தகவல் பரவியதைத் தொடர்ந்து, பசும்பொன் கிராமம் முழுவதும் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடபட்டிருந்தது. இதனிடையே, முதல்வரது பேட்டிக்காக செய்தியாளர்கள் குழுமியிருந்த நிலையில், அவர்களை சந்திக்காமலேயே பசும்பொன்னிலிருந்து புறப்பட்டுச் சென்றார்.


 முதல்வர் திரும்பிச்செல்லும் வழியில், கோட்டை மேடு என்ற இடத்தில் கூடியிருந்த தினகரன் ஆதரவாளர்கள், முதல்வர் மற்றும் துணை முதல்வருக்கு எதிராகக் கோஷமிட்டதால், திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்