[ad_1]

சென்னை விமான நிலைய லிப்டில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சிறிதுநேரம் சிக்கிக் கொண்டார்.





ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் நடைபெற்று வரும் தேவர் குருபூஜை விழாவில் கலந்துகொள்வதற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று விமானம் மூலம் மதுரை செல்ல இருந்தார். அதற்காக சென்னை விமான நிலையம் சென்ற அவர், கீழ்தளத்தில் இருந்து உள்நாட்டு முனையம் பகுதிக்குச் செல்லும் முதல்தளத்துக்கு லிப்ட் மூலம் சென்றார். அவர் ஏறியபோது தொழில்நுட்பக் கோளாறு ஏற்படவே லிப்ட் நடுவழியில் நின்றதாகக் கூறப்படுகிறது. 


இதனால் லிப்டில் சிறிதுநேரம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சிக்கிக் கொண்டார். இதனால் விமான நிலைய வளாகம் பரபரப்படைந்தது. உடனடியாக தொழில்நுட்பப் பணியாளர்கள் வந்து லிப்டில் ஏற்பட்ட கோளாறை சரி செய்தனர். இதையடுத்து லிப்டில் இருந்து மீட்கப்பட்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, விமானம் மூலம் மதுரை புறப்பட்டுச் சென்றார்.