[ad_1]




“சுத்தகரிக்கப்பட்ட குடிநீர் விவகாரத்தில் ஆளுநர் மாளிகைக்கு எதிராக தவறான தகவல்களை பரப்ப வேண்டாம்” என்று துணைநிலை ஆளுநர் கிரண்பேடி அரசியல் கட்சியினருக்கு அறிவுறுத்தியுள்ளார்.




சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வரும் முத்தியால்பேட்டை மார்க்கெட்டை ஆளுநர் கிரண்பேடி ஆய்வு செய்தார். அப்போது 
முத்தியால்பேட்டை சட்டமன்ற தொகுதியில் அமையவிருந்த  சுத்தகரிக்கப்பட்ட குடிநீர் திட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் வழங்கவில்லை எனக்கூறி அந்தத் தொகுதியின் அதிமுக எம்.எல்.ஏ. வையாபுரி மணிகண்டன் ஆதரவாளர்கள், ஆய்வுக்கு வந்த கிரண்பேடிக்கு கறுப்புக் கொடியைக்காட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போலீஸுக்கும் அவர்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து  போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரும் கைது செய்யப்பட்டனர்.

அவர்களின் இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு சமூக வலைதளத்தில் பதில் அளித்த கிரண்பேடி, “கோப்புகள் எங்கு உள்ளது? ஏன் தாமதம் என்பதை சம்பந்தவட்டர்களிடம் கேட்டு தெளிவு பெறவேண்டும். அதை விடுத்து ஆளுநர் மாளிகை தொடர்பாக தவறான தகவல்களை பரப்புவதை கைவிட வேண்டும்” என்று தெரிவித்திருக்கிறார்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்