[ad_1]
மதுரை மாவட்டம் திருமங்கத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், ''தமிழக எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் மேட்டுபாளையத்தில் பேசுகையில் மாணவர்கள் அரசியலுக்கு வரவேண்டும் எனக் கூறி மாணவர்களுக்கு அரசியல் ஆர்வத்தை தூண்டியுள்ளார். மாணவர்கள் பள்ளி, கல்லூரியை முடித்து, சுயசார்பபை வளர்த்துகொண்ட பின்னர்தான் அரசியலுக்கு வரவேண்டும். மாணவர்களின் படிப்பு பாதிக்கும் வகையில் ஸ்டாலின் பேசியதை வண்மையாக கண்டிகிறேன் என்று அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும், பருவமழையை வரவேற்க்கும் வகையில் தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து தயார் நிலையில் உள்ளது. மீட்பு குழு தயார்நிலையில் உள்ளது. 32 மாவட்டங்களில் தொடந்து கண்காணிக்கும் விதத்தில் 24 மணி நேரம் இயக்கும் அவசர கட்டுப்பாட்டு மையம் எழிலகத்தில் இயங்கி வருகின்றது. மோட்டார் பம்புகள் மூலம் மழைநீர் வெளியேற்றப்பட்டு வருகின்றது. போக்குவரத்து பாதிக்காத வகையிலும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
பெருமழை நேரங்களில் பொதுமக்கள் வெளியே செல்வதை முடிந்தளவு தவிர்க்கவேண்டும். அரசு துரித நடவடிக்கை எடுத்து வரும்நிலையில் ஸ்டாலின் தவறான செய்திகளை பரப்பி மக்களிடம் பீதியை ஏற்படுத்தி வருகிறார். எதிர்க்கட்சித் தலைவர்கள் உள்ளிட்ட பிற அமைப்புகளை சார்ந்தவர்களும் குறைகளை சுட்டிக்காட்டுவதை தவிர்த்துவிட்டு அனைவரும் இணைந்து பேரிடரை எதிர்கொள்ள உறுதுணையாக இருக்கவேண்டும். சேதமடைந்த கட்டிடங்களிலுள்ளவர்களை வேறு இடத்திற்கு மாற்ற சம்மந்தப்பட்ட ஆட்சியர்களுக்கு உத்திரவிடப்பட்டுள்ளது. சென்னை ஆற்றங்கரையோரங்களில் உள்ளவர்களை வெளியேற அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவர்களை வேறு இடத்தில் தங்க வைக்கவும், உணவு, உடை, மருத்துவம் உள்ளிட்ட வசதிகளும் தயார்நிலையில் உள்ளது என்றார்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
எதிர்க்கட்சிகள் குறை சொல்வதை விடுத்து இணைந்து செயல்பட வேண்டும் - ஆர்.பி.உதயகுமார்
TAGS :
COMMENTS