[ad_1]



கோவை கோட்டை மேடு பகுதியில் டெங்கு காய்ச்சல் பரவலை தடுக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்ககோரி தி.மு.க. இளைஞர் அணியினர் கொசுவலையினை உடையாக அணிந்து வந்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.



கோவையில், கொசுத் தொல்லை அதிகரித்து வருகிறது. நகர் மற்றும் புறநகர் பகுதிகள் எங்கும் கொசுக்கள் ஹவுஸ்புல்தான். இந்நிலையில், தி.மு.க.  கோவை மாநகர இளைஞர் அணி செயலாளர் அப்பாஸ் தலைமையில், 50-க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். கோவை மாநகர் பகுதி முழுவதும் சுகாதாரம் இல்லாமல் இருப்பதால் நோய் பரவும் நிலை இருப்பதாகவும், குறிப்பாக உக்கடம் பகுதிக்கு உட்பட்ட அநேக இடங்களில் கொசுக்கள் மூலம் நோய் பரவுவதாகவும், இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகளிடம் மனு அளித்தும் நடவடிக்கை எடுப்பதில்லை எனவும், அப்போது அவர்கள் குற்றம்சாட்டினர். உள்ளாட்சித்துறை அமைச்சரின்  சொந்த மாவட்டத்திலேயே இந்த நிலை நிலவுவதாகவும் டெங்கு காய்ச்சலை தடுக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க  வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தினர்.