[ad_1]
நியூசிலாந்து அணிக்கெதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றிபெற்றது.
Photo Credit: ICC
கான்பூரில் நடந்த போட்டியில் இந்திய அணி நிர்ணயித்த 338 ரன்கள் இலக்கை துரத்திய நியூசிலாந்து அணி அதிரடியாக தொடக்கம் கண்டது. புவனேஷ்வர் குமாரின் பந்துவீச்சில் பவுண்டரிகளுக்கு அனுப்பிய கார்லின் முன்ரோ உதவியுடன், முதல் 4 ஓவர்களுக்குள் 30 ரன்களைக் கடந்தது. அந்த அணியின் ஸ்கோர் 44 ரன்களை எட்டியபோது 10 ரன்கள் எடுத்திருந்த மார்டின் கப்திலை பும்ரா வெளியேற்றி ஆறுதல் அளித்தார். இதையடுத்து முன்ரோவுடன் கைகோர்த்த கேப்டன் கேன் வில்லியம்ஸன், நியூசிலாந்து அணிக்கு நம்பிக்கை அளித்தார். இரண்டாவது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 109 ரன்கள் குவித்தது. முன்ரோ 75 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவர் வெளியேறி சிறிதுநேரத்தில் கேன் வில்லியம்ஸனும் 64 ரன்களில் வெளியேற போட்டி இந்திய அணியின் பக்கம் திரும்புவது போல இருந்தது. இந்த இரண்டு விக்கெட்டுகளையும் சுழற்பந்து வீச்சாளர் யுஷ்வேந்திர சஹால் வீழ்த்தினார்.
ஆனால், அடுத்துவந்த முதல் போட்டியின் வெற்றி இணையான ராஸ் டெய்லர் மற்றும் டாம் லாதம் ஜோடி விரைவாக ரன் சேர்த்து இந்திய பந்துவீச்சாளர்களை சோதித்தனர். நியூசிலாந்து அணியின் ஸ்கோர் 247-ஐ எட்டியபோது இந்த ஜோடியை பும்ரா பிரித்தார். ராஸ் டெய்லர் 39 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இருப்பினும் மறுமுனையில் டாம் லாதம், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திக் கொண்டிருந்தார். ஒருகட்டத்தில் நியூசிலாந்து அணியின் வெற்றிக்கு 24 பந்துகளில் 35 ரன்கள் தேவை என்ற நிலை இருந்தது. இதனால் மைதானத்த்தில் இருந்த ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்திருந்தினர். அந்த சூழலில் அடுத்தடுத்து 2 விக்கெட்டுகளை நியூசிலாந்து இழந்தது. 24 பந்துகளில் 37 ரன்களைக் குவித்திருந்த நிக்கோலஸை ஸ்டம்புகள் சிதற புவனேஷ்வர் குமார் பெவிலியனுக்கு அனுப்பினார். அடுத்த ஓவரில் டாம் லாதமும் ரன் அவுட் ஆகி வெளியேற மைதானத்தில் இருந்த ரசிகர்கள் ஆர்ப்பரித்தனர்.
நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 331 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 6 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்திய அணி, 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் வென்றது. சிறப்பான பந்துவீசிய ஜஸ்ப்ரித் பும்ரா 47 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். முதலில் பேட் செய்த இந்திய அணி ரோகித் ஷர்மா (147) மற்றும் விராட் கோலி (113) ரன்கள் உதவியுடன் 50 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 337 ரன்கள் குவித்தது. 147 ரன்கள் குவித்த ரோகித் ஷர்மா ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
பும்ரா அசத்தல் பந்துவீச்சு - இந்திய அணி த்ரில் வெற்றி!
TAGS :
COMMENTS