[ad_1]
கோவையில், அடுத்தடுத்து ஐந்துக்கும் மேற்பட்ட கடைகளுக்குள் புகுந்த மர்ம நபர்கள் ரூ.10 லட்சத்தை கொள்ளையடித்துச் சென்றனர்.
கோவை, வெரைட்டி ஹால் பகுதியை அடுத்த, தாமஸ் வீதி பகுதியில் ஏராளமான மொத்த கொள்முதல் விற்பனை நிலையங்கள் உள்ளன. இங்கு அழகு சாதன பொருள்கள், மளிகை மற்றும் வீட்டு உபயோக பொருள்கள் அதிக அளவில் விற்பனை செய்யபட்டு வருகின்றன.
இப்பகுதியில் பேன்சி கடை நடத்தி வருபவர் மங்காரவ் (35). பணி முடிந்து நேற்று வழக்கம் போல கடையை பூட்டிவிட்டு வீட்டுக்குசென்றார். அப்போது கடையின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் கடையில் இருந்த ரூ.10 லட்சம் பணத்தை கொள்ளையடித்து சென்றனர். அதேபோல, இவரது கடை அருகிலேயே புத்தகக் கடை நடத்தி வருபவர் பிரேம் சிங் (37). இவரது கடையின் பூட்டை உடைத்த மர்ம நபர்கள் உள்ளே இருந்த ரூ.6 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்துச் சென்றனர்.
மேலும், அடுத்தடுத்து இருந்த 3-க்கும் மேற்பட்ட கடைகளில் மர்ம நபர்கள் கை வரிசையை காட்டியுள்ளனர். கொள்ளைபோன பணம் மற்றும் பொருள்கள் தொடர்பாக வெரைட்டி ஹால் போலீஸ் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். கைரேகை நிபுணர்கள் தடையங்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
நகரின் முக்கியப் பகுதியில் நடைபெற்றுள்ள இந்த கொள்ளை சம்பவத்தால், வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
கோவை: நகரின் மையப்பகுதியில் அடுத்தடுத்து கொள்ளை!
TAGS :
COMMENTS