[ad_1]

கேரள மாநிலத்தில் உள்ள  பைவ் ஸ்டார் நட்சத்திர ஹோட்டல்களில் பீர் தயாரித்து விற்பனை செய்ய அனுமதி கொடுக்க வேண்டும் என கலால் துறை ஆணையம் கேரள அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. கேரள மாநிலத்தில் கடந்த காங்கிரஸ் ஆட்சியின்போது பைவ் ஸ்டார் ஹோட்டல்களில் உள்ள பார்கள் தவிர மற்ற அனைத்து மது பார்களும் மூடப்பட்டன. கேரள அரசு மதுக் கடைகளையும் படிப்படியாக மூடவும் திட்டமிட்டு இருந்தது. கடந்த தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேரளாவில் ஆட்சியைப் பிடித்தது. பினராயி விஜயன் தலைமையிலான இடதுசாரி முன்னணி அரசு கேரளாவில் மீண்டும் மதுக்கடைகளைத் திறக்க உத்தரவிட்டது. அதைத் தொடர்ந்து கேரள கலால்துறை ஆணையர், ரிஷிராஜ் சிங் கேரள மாநில அரசிடம் ஓர் அறிக்கைத் தாக்கல் செய்துள்ளார்.





அந்த அறிக்கையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் பல நட்சத்திர ஹோட்டல்களில் அவர்களே பீர் தயாரித்து வருகிறார்கள். அதுபோல  கேரளாவில் பாரோடு இயங்கும் பைவ் ஸ்டார் ஹோட்டல்களில் அவர்களே சொந்தமாக பீர் தயாரித்து விற்பனை செய்ய அனுமதி வழங்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். இந்தக் கோரிக்கை கேரள அரசின் பரிசீலனையில் உள்ளது. கேரள மாநில அரசு அனுமதி கொடுத்தால்  பைவ் ஸ்டார் ஹோட்டல்களில் பீர் தயாரிப்புப் பணி உடனடியாகத் தொடங்கிவிடும். பீர் தயாரிக்கும் பொருள்கள் மற்றும் மெஷின்கள் அமைப்பதற்கு சுமார் ஒன்றரை கோடி வரை செலவாகும். இதற்கு கேரள காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.