[ad_1]
தஞ்சைப் பெரியகோவிலின் 1032 வது சதயவிழாக்குத் தஞ்சையில் உள்ள பல்வேறு சாதிய அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சியினர் ஊர்வலமாக வந்து மாலையிட்டு மரியாதை செலுத்தினர்.
தஞ்சைப் பெரியகோவிலைக் கட்டிய ராஜராஜ சோழனின் 1032 -வது சதயவிழாவில் 34 அமைப்புகளைச் சேர்ந்த, சாதிய மற்றும் அரசியல் கட்சிகளுக்கு ஊர்வலமாக வந்து மாலையிடுவதற்கு அனுமதி அளித்திருந்தனர். காலை 8 மணி முதல் 10 மணி வரை இந்து அமைப்புகளுக்கும், 10 மணி முதல் 12 மணிவரை தேவர் பேரவை அமைப்பினருக்கும், 1 மணி முதல் மாலை 5 மணி வரை தேவந்திரகுல வேளாளர் பேரவை அமைப்பினருக்கும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது.
இதுகுறித்து சதயவிழாக்குழு சாதிய ஒழிப்புக்குழுவின் தலைவர் பாலா கூறுகையில், ”மாமன்னன் ராஜராஜன் பெரியகோயிலைக் கட்டினான். ராஜராஜன் இந்தச் சமூகத்தைச் சேர்ந்தவர், இந்த சாதியைச் சேர்ந்தவர் என்று எந்தக் கல்வெட்டிலும் பொறித்து வைக்கவில்லை. ஆனால், இங்குள்ள அரசியல் தலைவர்கள் தங்களுடைய அரசியல் சுய லாபத்திற்காக ஊர்வலமாக வந்து ராஜராஜன் சிலைக்கு மாலை போடுகிறார்கள். அதேபோன்று சாதியத் தலைவர்களும் எங்கள் சமூகத்தைச் சேர்ந்தவர் ராஜராஜன் சோழன் என்று சொல்லுவது எந்தவிதத்தில் நியாயம். அதை காவல்துறையும், அரசும் அனுமதியளித்து சாதிய உணர்வுகளைத் தூண்டுகிறார்கள் என்பதுதான் உண்மை. அதைத்தான் நாங்கள் எதிர்க்கிறோம். எப்போது இந்த விழா எடுக்கிறார்கள் தெரியுமா? 1000 வது ஆண்டுவிழாவிற்கு பிறகுதான் சதயவிழாவைப் பெரிதாகத் தூக்கிப் பார்க்கிறார்கள். எந்த அரசியல் கட்சிகளுக்கும், சாதிய அமைப்புகளுக்கும் ராஜராஜன் சதயவிழாவில் ஊர்வலமாக வந்து மாலையிடுவதை அனுமதிக்கக் கூடாது. அப்போதுதான் இனிவரும் காலங்களில் ராஜராஜனுக்காகக் கொண்டாடும் சதயவிழாவில், சாதிய மோதல்களைத் தடுக்க முடியும். இல்லையேல் இனிவரும் காலங்களில் தஞ்சை பூமி, கலவர பூமியாக மாறுவதற்கான் அச்சம் பொதுமக்களிடையே பரவலாக இருந்து வருகிறது. எனவே, ஆரம்பத்திலேயே தடுத்து நிறுத்துவதற்கு அரசு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்றார்.
’சாதிய விழாவாகிப்போன சதய விழா’ -பொங்கும் சாதிய ஒழிப்புக்குழு
TAGS :
COMMENTS