[ad_1]
தமிழகம் மற்றும் புதுச்சேரியில், வரும் நவம்பர் 2 -ம் தேதி வரை கனமழை பெய்ய வாய்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில், வடகிழக்குப் பருவமழை தொடங்கி பெய்துவருகிறது. சென்னையில் நேற்றிரவு முதல் கனமழை பெய்துவருகிறது. நகரின் பல பகுதிகளில் கணிசமான அளவு மழை பெய்துள்ளது. இரவு தொடங்கிய மழை காலையிலும் தொடர்ந்ததால், பொதுமக்கள் வேலைக்குச் செல்வதில் சிரமம் ஏற்பட்டது. கோடம்பாக்கம், தியாகராய நகர், வேளச்சேரி, சைதாப்பேட்டை, ஆவடி, அம்பத்தூர் உள்ளிட்ட இடங்களில் நல்ல மழை பெய்துவருகிறது.
இன்று திங்கள்கிழமை என்பதால், சென்னையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த வளி மண்டல மேலடுக்குச் சுழற்சி இலங்கை அருகே நிலைகொண்டுள்ளதால், வரும் நவம்பர் 2 -ம் தேதி வரை மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில், இன்று வழக்கம்போல பள்ளி, கல்லூரிகள் இயங்கும் என மாவட்ட ஆட்சியர் விளக்கம் அளித்துள்ளார்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
சென்னையில் கனமழை; நகரின் பல பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல்
TAGS :
COMMENTS