[ad_1]
Coimbatore: மாயமான கோவை வருமானவரித்துறை அதிகாரியைத் தேடி, தனிப்படை போலீஸ் கோவா விரைந்துள்ளனர்.
கோவையைச் சேர்ந்தவர் செண்பகராமன். ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ்., அதிகாரி. இவரது மகன் சிவக்குமார்(38). கோவை வருமான வரித்துறை, தலைமையிட துணை ஆணையராக பணியாற்றி வருகிறார். கடந்த 2008-ம் ஆண்டு, ஐ.ஆர்.எஸ். தேர்ச்சி பெற்றவர்.இவரது மனைவி ஸ்ரீதேவி. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில், சிவக்குமார் கடந்த 13-ம் தேதி திடீரென மாயமானார். இதையடுத்து, குடும்பத்தினர் பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், பீளமேடு போலீஸில் புகார் அளிக்கப்பட்டது. முதல் கட்ட விசாரணையில், 13-ம் தேதி அதிகாலை, 1.00 மணியளவில், சிவக்குமார் வீட்டில் இருந்து ஒரு சூட்கேசுடன் வெளியேறியது, அவர் குடியிருப்பில் பொருத்தப்பட்ட சி.சி.டி.வி கேமராவில் பதிவாகியிருந்தது. அதேபோல, அவரது மொபைல் போன், ஏ.டி.எம்., கார்டு உள்ளிட்ட அனைத்தையும் வீட்டில் வைத்து சென்றுள்ளார். குடும்ப பிரச்னை காரணமாக, சிவக்குமார் வீட்டை விட்டு சென்றிருக்கலாம் என கூறப்பட்டது.இந்நிலையில், சிவக்குமார், கோவா சென்றதாக தனிப்படை போலீஸ்க்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், கடந்த இரு தினங்களுக்கு முன் தனிப்படையை சேர்ந்த 4 போலீஸார் கோவா சென்றனர். அங்கு தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
மாயமான கோவை வருமானவரித்துறை அதிகாரியைத் தேடி கோவா விரைந்த தனிப்படை!
TAGS :
COMMENTS