[ad_1]
ராமநாதபுரம் சட்டக் கல்லூரி இன்று சத்தமில்லாமல் தமிழக அமைச்சர் மணிகண்டனால் திறந்து வைக்கப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் சட்டக் கல்லூரி துவக்க முதலமைச்சர் எடப்பாடி அனுமதி அளித்தார். இதையடுத்து கல்லூரியில் மூன்றாமாண்டு மற்றும் ஐந்தாமாண்டு சட்டப் படிப்புக்குத் தலா 80 இடங்கள் ஒதுக்கப்பட்டதுடன் கல்லூரிக்கென 2.26 கோடி ரூபாய் நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து ராமநாதபுரம் சட்டக் கல்லூரியில் சேருவதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதில் 73 மாணவர்கள் 5 ஆண்டு சட்ட படிப்பிற்கும், 16 பேர் 3 ஆண்டு சட்ட படிப்பிற்கும் கலந்தாய்வு மூலம் தேர்வு செய்யப்பட்டனர்.
ராமநாதபுரம் மாவட்டம் பெருங்குளம் ஊராட்சியில் உள்ள அரசு உயர் நிலைப்பள்ளிக் கட்டடத்தில் தற்காலிகமாக இந்தச் சட்டக் கல்லூரி இயங்க உள்ளது. சட்டக் கல்லூரி வகுப்புகள் நாளை துவங்க உள்ள நிலையில் அமைச்சர் மணிகண்டன் சட்ட கல்லூரியினை இன்று துவங்கி வைத்தார் . இந்த நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் நடராஜன், சட்டக் கல்லூரி சிறப்பு அதிகாரி ராம்பிரான் ரஞ்சித்சிங் மற்றும் அ.தி.மு.க-வினர் பங்கேற்றனர்.
சட்டக் கல்லூரிக்கான நிரந்தரமான பெயர்ப் பலகை இல்லை, சட்டத்தினை நிறைவேற்ற கூடிய அவைகளில் இடம் பெற்றிருக்கும் பாராளுமன்ற, சட்ட மன்ற உறுப்பினர்களுக்கோ அழைப்பு இல்லை. தற்காலிகமாகக் கல்லூரி அமைய உள்ள அரசு உயர் நிலைப்பள்ளி கட்டடம் அமைந்துள்ள இடத்தை வழங்கிய உள்ளூர் ஜமாத் நிர்வாகிகளைக் கண்டு கொள்ளவில்லை என நிறைய மனக்குறையுடன் இந்த திறப்பு விழா அமைதியாக நடத்தப்பட்டுள்ளது.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
ராமநாதபுரத்தில் சத்தமின்றி திறந்து வைக்கப்பட்ட சட்டக் கல்லூரி
TAGS :
COMMENTS