[ad_1]




'இந்தியாவின் இரும்பு மனிதர்' என்று அழைக்கப்பட்டவர் சர்தார் வல்லபாய் பட்டேல். குஜராத் மாநிலத்தில் பிறந்த இவர், இன்றைய ஒருங்கிணைந்த இந்தியாவை உருவாக்கியதில் முக்கிய பங்காற்றியவர். இந்தியாவின் முதல் துணைப் பிரதமராகவும் இருந்த சர்தார் வல்லபாய் பட்டேலின் பிறந்த தினம் இன்று. 




அவரது பிறந்த தினத்தை முன்னிட்டு, டெல்லில் உள்ள அவரது சிலைக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், குடியரசு துணைத் தலைவர் வெங்கைய நாயுடு ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். மேலும், மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்ட மத்திய அமைச்சர்களும் மரியதைசெய்தனர். அதன் பின்னர், பிரதமர் நரேந்திர மோடி, டெல்லி தயான் சந்த் மைதானத்தில் ஒற்றுமைக்கான ஓட்டத்தைத் துவக்கிவைத்தார். இதில் பொதுமக்கள், அரசு அதிகாரிகள் எனப் பலர் கலந்துகொண்டுள்ளனர். 



 அப்போது பேசிய மோடி, “இன்று சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்த தினம். அதேபோன்று, முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் நினைவு நாளும் கூட. ஒற்றுமைக்கான இந்த ஓட்டத்தில் கலந்துகொள்ள வந்திருக்கும் இளைஞர்களைப் பார்ப்பத்தில் மகிழ்சியாக இருக்கிறது. இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பும், பின்பும் பட்டேல் இந்தியாவுக்கு ஆற்றிய பங்களிப்பை நினைத்துப் பெருமைகொள்கிறேன். ஒருங்கிணைந்த இந்தியாவை உருவாக்குவதில் அவரது பங்களிப்பை இன்றைய இளம் தலைமுறையினர் மதிக்கின்றனர்.  இந்தியா பன்முகத் தன்மைகொண்ட நாடு. அந்த வேற்றுமையில் ஒற்றுமையே நமது சிறப்பு ” என்றார்.





 அதன் பின்னர், ஒற்றுமைக்கான ஓட்டத்தை கொடியசைத்துத் துவக்கிவைத்தார் மோடி. முன்னதாக பிரதமர் மோடி, அமைச்சர்கள், அதிகாரிகள் என அனைவரும் ஒற்றுமைக்கான உறுதிமொழி எடுத்தனர். 
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்