[ad_1]

Puduchery: 

”பேனர் குறித்த உயர்நீதிமன்றத்தின் உத்தரவு புதுச்சேரியில் இன்றிலிருந்தே அமல்படுத்தப்படும்” என்று புதுச்சேரியின் பொதுப்பணித்துறை அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்திருக்கிறார்.



பேனர்




புதுச்சேரி பொதுப்பணி மற்றும் உள்ளாட்சித் துறையின் அமைச்சர் நமச்சிவாயம் சட்டமன்ற வளாகத்தில் இன்று பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ”பேனர் வைப்பது தொடர்பாக உயர்நீதிமன்றம் பிறப்பித்திருக்கும் புதிய உத்தரவை புதுச்சேரி அரசு முழுமையாக செயல்படுத்தும். அதன்படி உள்ளாட்சித் துறை மற்றும் பொதுப்பணித்துறையால் அங்கீகரிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே பேனர்களை வைக்க வேண்டும். அதேபோல உயிரோடு இருப்பவர்களின் படத்துடன் பேனர்களை வைப்பது இனி கூடாது. புதுச்சேரி, உழவர்கரை நகராட்சிகள் மற்றும் கொம்யூன் பஞ்சாயத்துக்குட்பட்ட பகுதிகளில் 2 லட்சம் சதுர மீட்டர் இடம் அடையாளம் காணப்பட்டுள்ளது.  அதேபோல பேருந்து நிலையம், சிக்னல்கள், சாலை தடுப்புச் சுவர் உள்ளிட்ட இடங்களில் நகராட்சியின் அனுமதி பெற்று பேனர்களை வைத்துக்கொள்ளலாம். உயர்நீதிமன்றத்தின் உத்தரவு இன்று சனிக்கிழமை (28.10.2017) முதலே நடைமுறைக்கு வருகிறது.



புதுச்சேரி




ஏற்கெனவே அனுமதி வாங்காமல் பேனர்கள் வைத்துள்ளவர்கள் இரு தினங்களில் அவற்றை அகற்றிவிட வேண்டும். மீறினால் உள்ளாட்சி நிர்வாகமே அவற்றை அகற்றி அதற்கானக் கட்டணத்தை உரியவரிடம் வசூலிக்கும். அதுமட்டுமல்லாமல் காவல்துறையில் வழக்குப் பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்த அவரிடம், பேனர்களை அகற்றச் செல்லும் நகராட்சி ஊழியர்களுக்கு அரசியல் பிரமுகர்கள் மிரட்டல் விடுக்கிறார்களே ?” என்ற பத்திரிகையாளர்களின் கேள்விக்கு, ”உரிய போலீஸ் பாதுகாப்புடன்தான் பேனர்கள் அகற்றப்படும். அதற்குப் பொதுமக்களும், அரசியல் கட்சியினரும் முழு ஒத்துழைப்பைத் தர வேண்டும். மத்திய அரசின் பண மதிப்பிழப்பு நடவடிக்கை அறிவிப்பு வெளியான நவம்பர் 8-ம் தேதியைக் கறுப்பு தினமாக அனுசரிக்க தேசிய அளவில் 27 கட்சிகள் முடிவு செய்திருக்கின்றன. அதுதொடர்பாக புதுச்சேரியிலும் 31-ம் தேதி அனைத்துக் கட்சிகளுடன் ஆலோசனை செய்யவிருக்கிறோம். அதில் கறுப்பு தினம் அனுசரிப்பது குறித்து அறிவிக்கப்படும்.