
டெல்லி: ஆன்லைனில் இனி மாதத்திற்கு அதிகபட்சமாக ஒருநபர் 12 ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஆன்லைனில் டிக்கெட் எடுப்பதை ஊக்குவிக்கும் விதமாக, இந்த சலுகையை ரயில்வே துறை அறிவித்துள்ளது. முன்னதாக ஆன்லைனில் முன்பதிவு செய்யும் ரயில் டிக்கெட்டுகள் எண்ணிக்கை மாதத்திற்கு அதிகபட்சமாக, 6 ஆக இருந்தது. ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய ஆதார் மற்றும் மொபைல் எண்களை இணைக்க வேண்டும் என்றும் ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
TAGS :
COMMENTS